பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

136 ஏழை பன் என்று எண்ணினான். ஏக்கம் கொண்டான். மறுநாளே ஒரு எச்சரிக்கை விளம்பரம், நாளிதழ்களில் வெளிவந்தது. 'ஆண்டர்சனின் அபூர்வ அமெரிக்க முறை எமக்கே முழு உரி மையுடையது. வேறு எவரேனும் ஆண்டர்சன் முறையைத் தமக்கும் உரியது என்று கூறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எச்சரிக்கிறோம்' என்ற முறையில் விளம்பரம் வந்தது.கந்தப்பனே கலங்கிப் போனான். "உன் பேச்சை நம்பிக்கொண்டு, மூன்றாயிரம் முதல் போட்டிருந்தால், நான் என்ன கதிக்கு ஆளாகியிருப்பேன்? நல்ல வேளையாகச் செல்லப்பன் நமக்கு நண்பன். நிலை உயர்ந்தாலும் நட்புடன் இருக்கிறவன் - சரியான சமயத்திலே எச்சரித்து என்னைக் காப்பாற்றினான். இல்லையென்றால் ஆபத்தாக அல்லலா போயிருக்கும் என்று கூறி எல்லப்பன் கண்டித்தான். கந்தப்பனுடைய கோயம், செல்லப்பன் மீது கூடச் செல்லவில்லை. நம்பவைத்து மோசம் செய்தானே, ஆண்டர்சன். நமக்கும் கொடுத்தான். அந்த முறைக்கான உரிமையை; செல்லப்பனுக்கும் அதே உரிமையைக் கொடுத் திருக்கிறானே! பேராசைதானே இதற்குக் காரணம்? சே! பார்த்தால் 'பெரிய மனுஷன்' போலக் காணப்பட்டான். காரியமோ இப்படி மோசமாக இருக்கிறது. நல்லவேளை, செல்லப்பன் முன்கூட்டியே சொல்லிவிட்டான். நாம், மூல தனம் போட்டுத் தொழிலை ஆரம்பித்துச் சில மாதங்கள் கழிந்த பிறகு, வழக்குத் தொடுத்திருந்தால், எனக்கல்லவா தலைவலியும் காய்ச்சலுமாக ஏற்பட்டுவிடும் என்று எண் ணிக் கொள்கிறான். செல்லப்பனோ, அமெரிக்க நிபுணர் முறை என்ன? அதனால் கிடைக்கத்தக்க ஆதாயம் எவ்வளவு என்று விசாரித்தபடி. இருக்கிறான். மற்றவர் அம்முறையி னைப் பெற்றிட ஒட்டாது தடுத்திடவே, வேறோர் ஆண்டர் சனை அலுவலகத்தில் அமர்த்தி, அவனிடம் ஒரு அமெரிக்க முறை இருப்பதாக எழுதிப் பெற்றுக் கொண்டிருக்கிறால்! பெரிய இடம்--எனவே மோதிக் கொள்ள எவருக்கும் துணிவு இல்லை! அதிலும் கந்தலாடைக் கந்தப்பன் எங்ஙனம் துணிவு பெறமுடியும்.