பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

138 ஏழை தொழிற்சாலையில் சேர்ந்துவிடுகிறார்கள். உழவுத் தொழி லுக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாகி விட்டது. உழவுத் தொழிலே நாசமாகி ஊரார் சோற்றுக்கே திண்டாடவேண்டி நேரிடும் என்று எச்சரிப்பதுடன், ஊர் மக்களின் நல்வாழ்வை எண்ணி ஆறுமுகம் தமது ஆலையை மூடவிடவேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று மற்றோர் தீர் மானமும், ஊராட்சி மன்றம் நிறைவேற்றிற்று. யும். அடிக்கிறான் கொள்ளை! அகப்பட்டதைச சுருட்டுகிறான்! நாம் இளித்தவாயர்கள் நமது பூமியில்தானே இருக்கிறது இரும்பு மண். நாம் கொடுத்தால்தானே அவன் வெட்டி எடுக்க முடி நிலத்தை விற்காதே! என்றெல்லாம் பேச்சு, முழக்கம், சுவரொட்டிகள்! ஆலைக் கான கட்டிடம் மட்டும் இரண்டு இலட்சம் ரூபாயை விழுங்கி விட்டது. ஆறுமுகத்தால் சமாளிக்க முடியவில்லை. இரும்பு கலந்த மண்ணைத் தோண்டி எடுக்கும் தொழி லாளருக்குப் புதுவிதமான நோய் கண்டுவிடுவதாக ஒரு டாக்டர் பலமாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். நோய் வராமலிருக்க வேண்டுமானால், தொழிலாளர்களுக்கு சுகாதார முறைப்படி விடுதிகளைக் கட்டிக் கொடுக்க முத லாளி முன்வரவேண்டும் என்ற கிளாச்சியும் தொடங்கப் பட்டது. தொல்லைகள் தாங்க முடியாத அளவுக்கு ஏற்பட்டு விட்டது சுண்டு, பணம் போனால் போகட்டும், மன நிம்மதி யாவது இருக்கட்டும் என்று எண்ணி ஆறுமுகம், இரும்பு ஆலையை மூடிவிட்டார். அடுத்த ஆறுமாதத்துக்குள் அந்த ஆலையை மிகக் குறைந்த விலைக்குச் செல்லப்பன் வாங்கினான். ஆறுமுகமே அகப்பட்டுக் கொண்டு விழித்தான். விட்டால்போதும் என்று