பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏழை 139 ஓடிவிட்டான்.இவனுக்கென்ன கெடுமதி? விலை கொடுத்துச் சனியனை வாங்கிக் கொள்கிறானே என்றனர், பலரும்! செல்லப்பன் முதலில், ஆலைக்கட்டிடத்தின் வண்ணத்தை மாற்றினான். கண்ணுக்குக் குளிர்ச்சியான பச்சை நிறம்! எப்படி! பார்க்கக் குளுகுளு என்று இருக்கிறதல்லவா?" என்று கேட்டான். 'ஆமாம்' என்றனர். ஊர் இது பற்றியே பேசலாயிற்று. என்ன இருந்தாலும் செல்லப்பன் கெட்டிக்காரன். முன்பு அந்தக் கட்டிடத்தைப் பார்த்தால் ஜெயில்போல இருக் கும்! காவிக்கலர் அடித்திருக்கும். உள்ளே நுழைகிற தொழி வாளிக்குப் பயமாகவே இருக்கும். இப்போதுதான் பார்வை" யாக இருக்கிறது. கிளிப்பச்சை நிறம்! 'அதுமட்டுந்தானா? முன்பு ஒவ்வொரு ஆளாகத்தான் உள்ளே போகலாம். வாயிற்படி அவ்வளவு குறுகல். இப் போது பாரேன். யானை நுழையலாம் தாராளமாக! அப் படித் திருத்தி அமைத்துவிட்டான்." " ஆறுமுகம் கஞ்சன். செல்லப்பன் அப்படி அல்ல; தாராளமாகச் செலவு செய்வான்; வருகிற இலாபம் மெது வாக வரட்டும் என்று இருப்பான். இந்த ஆறுமுகம் அப்படி அல்ல. ஓட்டக் கறந்து பசுவை ஒடாக்கிவிடுவான்.' இப்படி ஊரார் உரையாடல். செல்லப்பனிடம் ஆலை வந்ததும் ஏதோ புதிய மாறுதல்! நல்ல நிலைமை ஏற்பட்டு விடுகிறது என்ற எண்ணம் பரப்பப்பட்டது. வண்ணம் புதி தாக அமைக்கவும், வாயற்படியை பெரிதாக்கவும் செலவு அதிகம் ஆகவில்லை. வண்ணம் அடிக்கும் கூலி நூறு ரூபாய் தான்! வண்ணத்துக்குச் செலவு இல்லை. புதிதாகத் துவக்கப் பட்ட வண்ணக் கம்பெனி செல்லப்பன் தயவை நாடித் தங்கள் சரக்குக்கு ஏஜண்டாக இருக்கும்படி கேட்டுக் கொண்டது. 'பார்க்கலாம். ஆனால் முதலில் உங்கள் வண்ணம் எப்படி இருக்கிறது என்பது எனக்கும் தெரியவேண்டும். ஊருக்கும் விளங்க வேண்டும். ஆகையினால் ஏதாகிலும் ஒரு பெரிய