பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

140 ஏழை கட்டிடத்திற்கு முதலில் வண்ணம் அடித்துக் காட்டுங்கள்' என்று செல்லப்பன் கூறினான்.கம்பெனிக்காரர் பெரிய கட்டி டம் எங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? தாங்கள்தான் அதற் கும் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். பெரிய மனது வைத்து, செல்லப்பன் ஆலைக் வண்ணம் செல்லின்றிக் எட்டிடத்தைக் காட்டினாள். அடைத்தவிதம் அது. ஆலையை வாங்குவது என்ற முடிவுக்குச் செல்லப்பன் வந்தபோது, தன் உறவினரில் சற்றுச் சரியானவராக உள்ள வரைப் பிடித்து, ஊராட்சி மன்றத்தைக் கண்ட பயல்க ளிடம் விட்டுவிட்டீர்கள். அது பெரிய ஆபத்தாக முடியும். யாராரோ ஊராட்சி மன்றத்திலே நுழைந்துகொண்டு கண்ட தற்கெல்லாம் வரி போடுவார்கள். நத்தம் புறம்போக்கு பஞ்சாயத்துக்கு என்பார்கள். காலாகாலமாக உம்முடைய மேற்பார்வையில் புறம்போக்கு இருக்கிறது. மானாவாரி பயிர் செய்து ஏதோ கிடைக்கிறது. அது அவ்வளவும் பாழா கும். ஆகவே, ஊராட்சி மன்றத்தை விட்டு விடாதீர்கள். நம்மவர்களாகப் போட்டுக் கைப்பற்றவேண்டும். இந்த ஊருக்கு ஒரு சுலெக்டர் வருகிறார், கவர்னர் வருகிறார் என்றால், ஊராட்சி மன்றத் தலைவரைக் கூப்பிட்டுப் பேசு வாரா, உம்மைக் கூப்பிடுவாரா? ஓரத்தில் ஒதுங்கி நீர் நிற்க வேண்டும். உம்மிடம் கடன்பட்டவன், கவர்னருடன் கை குலுக்குவான். செச்சே! இப்படி இருக்கலாமா? என்வ பிர மாதமாக செலவாகிவிடப் போகிறது! உமக்கு மனம் இல்லா விட்டால், என்னிடம் வீட்டுவிடும்; நான் பார்த்துக் கொள்கி றேன் செலவு அவ்வளவும்" என்று தூண்டினான். ஊராட்சி மன்றம் செல்லப்பன் கைக்கு அடக்கமாகிவிட்டது. பழைய தீர்மானம் போட்டவர்கள், வெளிநாட்டு வியாபாரிகளிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டவர்கள் என்ற புகார் கிலப்பப் பட்டது. பத்தே ரூபாய்தான் செலவு இதற்கு! தீர்மானங் கள் 'ரத்து' செய்யப்பட்டன. ஆலைக்கு ஏற்பட்ட ஊர் எதிர்ப்பு ஒழிந்துவிட்டது. அடிக்கடி புதிய புதிய ஆட்களுடன் செல்லப்பன் ஆலைப்பக்கம் வரலானான். ஆலை பெரிதாகப்