பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏழை 145 "என்ன சொல்லுகிறாய்? கள்ளக் கடத்தல், உன் ஏற்பாடா?" பேசக் "விவரமாக இதுபோன்ற விஷயங்களைப் கூடாது. என்றாலும், உனக்குத் துணிவு பிறக்க வேண்டும்; என்னிடம் நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காகக் கூறு பதக்கம் கிறேன். கேள்; மேங்கா காட்டிக் கொடுத்துப் பரிசாகப் பெற்றாளல்லவா, கடிகாரம் கள்ளக் கடத்தல் செய்தவனை. பெயர் சிங்காரம். அவன் என் ஆள்தான். என் ஏற்பாட்டின்படிதான் அவன் கடிகாரங்களைக் கள்ளத் தளமாகக் கொண்டுவந்தான். மேங்காவுக்கும் அது தெரியும். அவளும் என் அலுவலகப் பணியில் ஈடுபட்டவளே. இருந் துமா, சிங்காரத்தைக் காட்டிக் கொடுத்தாள் என்றுதானே கேட்கத் துணிகிறாய். அதுவும் என் ஏற்பாடுதான். திகைப்பா? விவரம், தெளிவளிக்கும். இருவரும் என்னால் அனுப்பிவைக் கப்பட்டவர்கள். என் திட்டப்படி, செயலாற்ற சிங்காரம் கடிகாரம் கடத்துவது! அதனை மேங்கா, அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுப்பது என்பது என் ஏற்பாடுதான். இருவரும் சிவோன் போகும்போதே, அதிகாரி ஒருவர் தொடர்கிறார் என்பது எனக்குத் தெரியும். அதற்காகவே இலங்கை ஓட்டல் ஒன்றில், சிங்காரத்திடம் சச்சரவு இடும்படி மேங்காவிடம் கூறியிருந்தேன். தேனொழுகப் பேசுகிறாளல்லவா, மேங்கா? அன்று தேளாம். அவள் பேச்சு! சிங்காரமே ஒரு கணம் திகைத் துப் போயிருக்கிறான். அதிகாரி இதனைக் கவனித்திருக்கி றார்.” இருவரும் பகைவர் என்று எண்ணிக்கொண்டு விட்டார்.” 'ஆமாம்! எவருக்கும் அந்த எண்ணம்தானே தோன் றும்! சிங்காரம் கைத்தடியை ஓங்குகிறான், மேங்காவைத் தாக்க. அந்தப் போக்கிரிப் பெண்ணோ காலணியைக் கழற்றி னாள், அவன்மீது வீச! அதிகாரி என்ன முடிவுக்கு வருவான்? பகை என்ற முடிவுக்குத்தானே! நான் சொல்லியனுப்பியபடி, அவரவருக்கிட்ட வேலையை முடித்துக் கொண்டு சப்பலில்