பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

158 லட்சாதிபதி அலமேலுவுக்குச் செட்டியார் என்ன சொல்லுகிறார் என்பதே புரியவில்லை. கேலி செய்கிறாரோ என்றுகூட நினைத்தாள்.செட்டியார் மெல்ல மெல்ல அவளிடம் சங் கதியைக் கூறும் வகையில் விளக்கிப் பத்து ரூபாயையும், பெட்டியையும் கொடுத்தனுப்பினார். பெட்டியோடு அலுமேலு சென்றதற்குப் பிறகு செட்டி யாருக்குப் புதிய தெம்பு பிறந்தது. அப்பாடா! ஒரு வழியாக ஒரு பத்து நாளைக்கு அதை இப்போது சனியன் என்று சொல்லவில்லை-அதிகாரிகள் பாவிகள்-கண்ணில் படா மல் ஒளித்தாயிற்று இனி, பயமில்லை. இந்த அதிகாரிகள் ஆட்டம் ஓய்ந்ததும், அப்பாவி அலமேலு பெட்டியைக் கொண்டு வந்து பயபக்தியோடு ஒப்படைக்கப் போகிறாள். அப்புறம் என்ன கவலை! மேல் வர செட்டியார் கெடுவுப்படி பத்து நாள் கழித்து அலமேலு வின் வரவை ஆவலோடு எதிர்பார்த்தார். பத்து நாளுக்கு பத்து நாள் ஆன பிறகும் கூட அவள் வில்லை. அந்தப் பத்து நாளில் இருபது முறை அலமேலுவின் குடிசைக்குப் போய் வந்து விட்டார். காலையும் மாலையும் அவர் அங்கே தவறாமல் இந்து அலமேலுவைப் பற்றி விசா ரித்ததை வித்தியாசமாகக்கூட நினைத்துக் கொண்டார்கள். ஒருத்தர் செட்டியாரின் அந்தரங்கமாகக்கூட அதைச் சொல் லியும் காட்டினார்."என்னசெட்டியார்வாள்! அவள் அப்படி! அபூர்வமான வேலைக்காரி. அவள் போனால் போகட்டுமே, வேறே சின்னவளாகக்கூட யாரையாவது பார்த்து ஏற் பாடு செய்து கொண்டால் போயிற்றென்றார். அன்றிலிருந்து அந்தக் குடிசைப் பக்கம் போவதையும் செட்டியார் நிறுத்திக் கொண்டார், சரி, மண்ணூருக்குப் போய்விட்டு வருவது என்று தீர் மானித்து ஒரு நாள் அந்த ஊருக்குச் சென்றார். அலமேலு வீடு எது என்று கேட்டு விசாரித்துக் கொண்டு அவள் வீட் டிற்குப் போனார். வீடு பூட்டிக் கிடந்தது. எங்கே போயிருக்கி "எங்கு போனார்களோ றார்கள் என்று விசாரித்தார்