பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

போது வேறு எதுவும் தேவையில்லை. நாளைக்கே வேலைக்கு வந்து சேர்ந்துவிடலாம்.”

“மிக்க நன்றி.. இன்று முதலேகூட நான் தயார்தான். பெட்டி படுக்கையுடன் வந்துவிட்டேன்.”

“அதுவும் நல்லதாயிற்று. இன்று நல்ல நாள்கூட. குழந்தைகள் பக்கத்து ஊர் போயிருக்கிறார்கள்... உமது ஜாகை இங்கேயேதான்... வேலைக்காரன் இடத்தைக் காட்டுவான்... பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல, உமது வேலை. பிள்ளைகளுக்கு ஒரு பெரிய அண்ணன்போல இருக்கவேண்டும்... எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள வேண்டும்...”

“ஜெமீன் குடும்பத்து மதிப்புக்கு ஏற்ற விதமாக குழந்தைகள் வளர என்னாலானதைச் செய்கிறேன்...”

“ஜெமீன் குடும்பத்துச் சுபாவம் குழந்தைகளுக்குத் தன்னாலே வந்துவிடும்... நீங்கள் கற்றுத் தரவேண்டியது மேனாட்டு முறைகளை; நடை உடை பாவனைகளை. இன்னும் சில வருஷங்களிலேயே நான் அவர்களைச் சீமைக்கு அனுப்பப் போகிறேன், அங்கேயே படிக்க... ஜெமீன் குடும்பத்திலே பிறந்தவர்கள் குறைந்தது ஜில்லா கலெக்டர் வேலைக்காவது போனால்தானே மதிப்பு. சீமைப் படிப்பு தேவையாம்... துரைகள் சொல்கிறார்கள்... நீங்கள்கூட ஆங்கிலமுறை உடையிலேயே இருப்பது நல்லது...! குழந்தைகள் பழகும்போதே ஒரு பாடம், கிடைக்கும்... ஆங்கிலப்பாட்டு தெரியுமல்லவா, கற்றுக் கொடுக்கவேண்டும். என் சின்னமகள் போனவருஷம் தன் பெரியப்பா வீடு போயிருந்தாள் ஒரு மூன்று மாதம்– பெங்களூர். அங்கு ஆங்கிலேயர் அதிகம் அல்லவா. அங்கு உமா பியானோ வாத்தியம் வாசிக்கக் கூடக் கற்றுக்கொண்டாள்...”

“குழந்தைகள் பெரிய மகளுடைய....”

“ஆமாம், ஆமாம்.... உமாமகேஸ்வரி, லலிதாம்பிகேஸ்வரி என்று எனக்கு இரண்டு பெண்கள்... தாயை இழந்து விட்டார்கள். லலிதாதான் மூத்தவள்; மூன்று குழந்தைகள்;