பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எதையோ பறிகொடுத்துவிட்டவரைப் போன்ற ஒரு பார்வை! ஏதோ ஒரு வேதனையை அடக்கிக் கொள்ள முயற்சிப்பது போன்ற ஒரு போக்கு. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறுவது போன்ற ஒரு நிலை.

சிறிது நேரமாகிலும் தனியே உலவச் செல்வது, அதிகநேரம் தமது அறையில் தங்கி இருப்பது, பணியாட்களைப் பார்க்கும்போது கண்களில் கவலை கப்பிக்கொள்வது. இந்த நிலை தெரிந்தது, சொக்கலிங்கத்தின் நடவடிக்கையில்.

மூத்த மகள், தன் கணவனையும் குழந்தைகளையும் கனித்துக் கொள்வதிலும், ஜெமீனுக்கென்று ஏற்பட்டு விட்ட சம்பிரதாயங்களை நிறைவேற்றி வைப்பதிலேயும் அதிகமாக ஈடுபாடு கொண்டிருந்ததால், சொக்கலிங்கத்தால் ஏற்பட்ட இந்த நிலைமைகளைப்பற்றி அதிக அளவு சிந்தித்துக் கொண்டிருக்க முடியவில்லை.

சரியான ஒரு காரணம் இல்லாமல் அப்பா இவ்விதம் நடந்துகொள்ள மாட்டார் என்று திடமாக நம்பினாள். ஆகவே அந்தப் பிரச்சினை பற்றி மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை.

உமாவின் நிலை அப்படி இல்லை. ஜெமீன் காரியத்தை மூத்தவள் கவனித்துக் கொண்டதால், உமாவுக்கு, சொக்க லிங்கத்தை ஒட்டிக் கிளம்பிய பிரச்சினையில் மனதை செலுத்தவும், இது காரணமாக இருக்குமா, அது காரணமாக இருக்குமா என்று பல்வேறு வகையிலே சிந்தனையில் மூழ்கிடவும் நிரம்ப நேரம் இருந்தது.

ஆனால் எவ்வளவு சிந்தித்தாலும், புதிர் மேலும் மேலும் சிக்கலுள்ளதாயிற்றே தவிர, தெளிவு கிடைக்கவில்லை.

"இப்படி இருக்குமாடி கோகிலம்! இவர் உண்மையில் ஒரு பெரிய ஜெமீன்தாரருடைய மகனாக இருக்கக்கூடும். தகப்பனாரிடம் ஏதோ ஒரு காரணத்தால் விரோதித்துக் கொண்டு, வீட்டைவிட்டு வந்து விட்டிருக்கிறார். இந்த இரக