பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 வண்டிக்காரன் சியம் அப்பாவுக்கு எப்படியோ தெரிந்துவிட்டிருக்கிறது. வந்த வரும் தன்னை 'வாத்தியார்' என்று மறைத்துச் சொல்லி இருக்கிறார். அப்பாவும் அதைக் கண்டுகொண்டதாகக் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்கிறார், அப்பாவா ஏமாறுவார்! வாத்தியார் என்று சொல்லிவிட்டால் நம்பி விடுவாரா? கோகிலம்!என்ன காரணம் இருக்கும், இவர் தன் னுடைய சொத்து சுகத்தை விட்டுவிட்டு இப்படி வாத்தியார் வேடம் போட்டுக் கொண்டு கிளம்ப? என்ன மனவேத னையோ! பாவம்..." என்று உமா பேசுவாள். அதைக் கேட்கும் போதே கோகிலாவுக்கு மனதிலே திகில் மூளும். உம சொல்கிறபடி இருந்துவிடக் கூடாது. சொக்கலிங்கம் வாத்தியார் வேலை பார்க்க வேண்டிய சாதாரண நிலையின ராக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டும், அந்த நம்பிக்கையை அணைத்துக் கொண்டும் காலம் கனியும் என்று காத்துக் கொண்டும் இருந்தாள் கோகிலா-ஜெமீன் மானேஜரின் மகள். சொக்கலிங்கத்தின் இனிய இயல்புகளும், வசீகரமான தோற்றமும், ஜெமீன் மாளிகையிலே கிடைத்திருந்த ஏற்ற மும், கோகிலாவின் மனதை வேகமாக அவன் பக்கம் இழுத் துச் சென்றுவிட்டது. சொக்கலிங்கத்தின் தோற்றமும், இளமங்கையர் விரும் பிடும் விதமாக இருந்தது. அவன் ஜெமீன்தாரன்! ஏதோ காரணத்தாலே தன் நிலையை மறைத்துக் கொண்டு இருக்கிறான் என்பது உண் மையாகிப்போனால், தனக்கு அவன் எட்டாக் கனி ஆகிப் போலானே என்ற ஏக்கம் கோகிலாவுக்கு. சொக்கலிங்கத்திடம் அவள் தன் மனதை பறிகொடுத்து விட்டிருந்தாள். எவ்வளவோ வேலைகளுக்கிடையிலும், அவன் சிற்சில வேளைகளில் தன் மீது செலுத்தும் பார்வையிலே ஒரு கனிவு இருப்பதை அவள் உணர்ந்து உளம் பூரித்தாள்.