பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மகன் 37 உமாவும் சொக்கலிங்கத்தின் தோற்றத்தால் ஈர்க்கப் பட்டாள் என்ற போதிலும் தங்கள் குடும்ப அந்தஸ்துக்கு ஏற்றவிதமான நிலை இருந்தாலொழிய சொக்கலிங்கத்தை தான் அடைய நினைப்பது நடைபெறக் கூடியது அல்ல என் பதை உணர்ந்திருந்ததால், தன் மனதிலே காதலைத் தீயென மூண்டெழ விடவில்லை. அவளுடைய உள்ளத்தில் முளைவிட்டுக் கொண்டிருந்த காதற் பயிருக்கு, ஜெமீன்முறை ஒரு வேலி போட்டுவிடும். என்பது உமாவுக்கு நன்றாகத் தெரியும். வாழ்க்கையை நடத்துவதற்காக 'வாத்தியார் வேலையோ அல்லது அது போன்ற வேறு ஏதேனும் அலு வலோ பார்த்தாக வேண்டிய நிலைதான் சொக்கலிங்கத் துக்கு என்றால், காதலிப்பது பலன்தராது---அது கருகிய மொட்டு ஆகிவிடவேண்டியதுதான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தாள். ஜெமீன்தாரர் சொக்கலிங்கத்துக்குக் காட்டும் மதிப் பைக் கவனிக்கும்போது, உமாவின் மனதிலே ஒரு ஆவல் எழும். உண்மையில் வரத்தியார் வேலை பார்க்க வந்தவராக இவர் இருக்க முடியாது. இவர் ஏதோ ஒரு ஜெமீன் வீட்டுப் பிள்ளைதான். என்ன காரணத்தாலோ மாறுவேடம் போட் டுக் கொண்டிருக்கிறார் என்ற ஒரு எண்ணம் தோன்றியது. அந்த எண்ணம் தந்த தித்திப்பிலேயே உமா மெத்தச் சுலைகண்டு வந்தாள். சொக்கலிங்கத்தின் உண்மை நிலை ஒருநாள் வெளியே தெரிந்துவிடும்; அப்போது அவரை அடையத் தனக்கு ஒரு தடையும் இராது என்ற நம்பிக்கையை நாளும் வளர்த்துக் கொண்டு வரலானாள். இரு எழில் மங்கையர் உள்ளத்திலும் இது போன்ற எண்ணங்களைக் கிளறிவிட்ட சொக்கலிங்கம் காதலைப்பற்றி எண்ணிப் பார்க்கக்கூடத் தனக்கு நேரம் இல்லை; நிலை இடம் தராது என்று இருந்து வந்தான்.