பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 வண்டிக்காரன் "படிப்பு நிறைய இருக்கும்; அது தெரிகிறது. திறமை சாலி. அப்படிப்பட்டவர் குழந்தைகளுக்குப் பாடம்சொல்லிக் கொடுப்பதிலேயா காலம் முழுவதும் இருப்பார். விரைவிலே பெரிய உத்தியோகத்துக்குப் போய்விடுவார்." 'அதென்னம்மா அப்படி. நம்ம ஜெமீனிலே அவர் கேட்கிற பணம் கொடுக்க முடியாதா என்ன...' 'பணம் ஒன்றுதானா முக்கியம்...அதிகாரம் அந்தஸ்து இதெல்லாம் வேண்டாமா...அவர் பெரிய உத்யோகம் பார்க் கக் கூடியவர்..எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது... ஜெமீன்தாரய்யா மனசு வைத்தால் நடக்காத காரி யமா . அவருக்கு தெரிந்த துரை யாரிடமாவது ஒருவார்த்தை சொன்னால் போதாதா! வேலை தன்னாலே வருமே!ஆனால் அந்தப் பிள்ளை கூச்சமில்லாமல் கேட்கவேண்டும்.' "டீச்சருக்கு இந்த இடம் ரொம்பப் பிடித்து விட்டிருக் கும் போலத் தெரிகிறது. ஓவியம் தீட்டுவார் என்று சொன் னேன்...அவருடைய அறை ஜன்னல் வழியாக, தோட்டத் தின் அழகைப் பார்த்துக் கொண்டே நின்றுகொண்டிருப்பார் நெடுநேரம்.' ‘அவருடைய ஜன்னல் வழியாகப் பார்த்தால் தோட் டம் முழுவதும் தெரியுமாம்மா! அப்படியானால் எங்க குடிசைகூடத் தெரியும்...அப்படித்தானே..." "" 'ஆமாம்! அடிக்கடி தோட்டத்துப் பக்கம் உலாவ வருகிறாரே, டார்த்ததில்லையா "பார்த்துப் பார்த்துப் பூரித்துக் கொண்டுதான் இருக் கிறேன்...' "புது வாத்தியாரை நான் பார்த்ததே இல்லையென்று முன்னே சொன்னாயே... "கிட்டே நெருங்கிப் பார்த்ததில்லை என்றுதான் சொன் னேன்... தொலைவிலே இருந்து பார்த்திருக்கிறேன்.. சின்ன ஜெமீன்தார்களோட வருவாரே அப்போது.