பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மகன் 45 'அதென்ன சின்ன ஜெமீன்தார்கள் - ராமு சோமுன்னு சொல்லேன். வயசிலே நீ பாட்டிபோல, அந்தக் குழந்தை களுக்கு. "இருக்கலாம். பார்க்கப்போனா புது வாத்தியாருக்கு வயசிலே நான் அம்மாபோல! ஆனால் கூப்பிட முடியுமா, மகனே வாடான்னு! “உனக்கு மகன் இல்லையே என்கிற வருத்தம்...இல் லையா. ஒரு மகன் இருந்திருந்தா, ஏதாவது வேலைக்குப் போவான்; பணம் கிடைக்கும்; இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கலாம்... இல்லையா-' 'இங்கே ஒரு குறையும் இல்லையே எங்களுக்கு. நாங்கள் இருவர்தானே! உள்ளது போதும்.. ஒரு குறையும் இல்லை..' "ஆமாம், கிழவன், உன்னோட புருஷன், வேண ஆட் டம் ஆடினவனாமே..சொத்துகூடக் கொஞ்சம் இருந்ததாம்! தொலைத்துவிட்டானாமே...மானேஜர் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தார்..." "ஆண் பிள்ளைகளோட சுபாவம்... சிலவேளைகளிலே அப்படி ஆகிவிடுது..." சரி, சரி! அதோ டீச்சர் குழந்தைகளோடு! கூப்பிடட் டுமா? பேசேன் அவரோட... நல்லவரு... எல்லோரிடமும் அன் பாகத்தான் பழகுவாரு..." "இரும்மா....அவர் ஏன் இங்கே வரணும். ஏம்மா, பச்சரிசி மாங்கா தர்ரேன், கொடுக்கறயா...வண்டிக்காரன் சம்சாரம் கொடுத்ததுன்னு சொல்லேன்... பச்சரிசி மாங்கா ரொம்பப் பிடிக்கும்...' "டீச்சருக்கா...அது எப்படி உனக்குத் தெரியும்? ‘‘டீச்சருக்குன்னு சொல்லல்லேம்மா... யாருக்கும்தான் ...பச்சரிசி மாங்கான்னா ரொம்பப் பிடிக்கும்... பொதுவாகச் சொன்னேன்...”