பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மகன் 47 "பேசுகிறேன் கோகிலம்! இல்லையென்று சொல்ல வில்லை. அவர் பேசப் பேசக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றுகிறது. அவ்வளவு இனிமையாகப் பேசு கேட்டுத் கிறார். ஆனால் அவருடைய இரகசியத்தைக் தெரிந்துகொள்ள வேண்டுமடி. அந்தப் பேச்சை மட்டும் என்னால் பேசமுடியவில்லை. கூச்சமாக இருக்கிறது" என்று உமா விளக்கம் அளித்தாள். கோபத்தை அடக்கிக் கொண்டு கோகிலா, “என்னம்மா கேட்க வேண்டும் அவரிடம். என்னைக் காதலிக்கிறீர்களா- திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறீர்களா என்றா! என்று கேட்டாள். ஜெமீன் முடுக்குக் குறையாமல் பேசினாள் உமா. "வலியச் சென்று என் காதலைக் கூறிட நான் என்ன சாமான்யக் குடும்பத்தவளா? கோகிலா! எங்கள் ஜெமீன் குடும்பத்துப் பெருமையை அறியமாட்டாயா! துடுக்குத்தன மாகப் பேசிவிட்டாயே! ஒரு பெண் தன் காதலைப் பற்றி ஆடவனிடம் பேசுவது பற்றி இந்தப்புத்தகங்களில் எழுதியிருக் கிறார்கள். படிக்கும் போது எனக்குச் சிரிப்பாய் வருகிறது. நாதா! உங்கள் மீது நான் அடக்க முடியாத காதல் கொண்டு விட்டேன் என்று நான் போய் பேசுவேன் அல்லது யார் மூலமாகவாவது சொல்லி அனுப்புவேன் என்றா எண்ணிக் கொண்டாய். அது இந்த இடம் அல்ல" என்றாள். உமாவுக்குக் கோபம் வருவது கண்டு கோகிலா மகிழ்ச்சி அடைந்தாள். இந்தக் கோபம் வளராதா என்றுகூட விரும்பினாள். மேலும் சற்றுக் கிளறிவிட எண்ணினாள். உங்கள் "இதென்ன வேடிக்கையாக இருக்கிறது, போக்கு! அவரை நீங்கள் பார்க்கும் பார்வை காதலைத்தவிர வேறு எதனைக் காட்டுகிறது. என்னிடமே மறைக்கப் பார்க்கி றீர்களே" என்று சிறிதளவு குறும்புத்தனத்தைக் கலந்து, பேசினாள்.