பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 வண்டிக்காரன் ல்லிதா, பலகணி வழியாக வெளிப்புறத்துக் கட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், 'ஓ' வென்று அலறினார்கள். பதறினர் அனைவரும். சொக்கலிங்கம், லலிதா பார்த்த பக்கம் பார்த்தான்; பயங்கரமான காட்சி தென்பட்டது. லலிதாவின் மூன்றாவது குழந்தை நாலு வயது நிரம்பாதவன் தத்தித் தத்தி நடந்து செல்கிறான்; துணை யாருமில்லை. எதிர்ப்புறமிருந்து புதிதாக வாங்கி வரப்பட்டிருந்த. முரட்டுக் குதிரை தூசி கிளப்பிக் கொண்டு பாய்ந்தோடி வரு கிறது. எல்லோரும் அலறிஓர்--என்ன செய்வது என்று தெரி யாமல். சொக்கலிங்கம் பலகணி வழியாக வெளியே தாவி, தண் ணீர்க் குழாயைப் பிடித்துக் கொண்டு, 'பரபர' வெனக் கீழே சரக்கு மரத்தில் இறங்குவதுபோல இறங்கி, கண் மூடிக் கண் திறப்பதற்குள் பாய்ந்தோடிச்சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு மற்றோர் புறம் பாய்த்து விட்டான். குதிரை நாலு கால் பாய்ச்சலில் சென்றது. குழந்தையை, அவ்வளவு துணிவுடனும் சாமர்த்தியத் துடனும், சொக்கலிங்கம் தூக்கிக் கொண்டிராது போயிருப் பின்...! நினைக்கவே நடுக்கம் எல்லோருக்கும். 'ஆண்டவனே! அட, என் கண்ணே ரமா!' என்று தாய்ப் பாசம் வழிய வழியக் கூவிக்கொண்டே லலிதாம்பிகா சென்று குழந்தையை சொக்கலிங்கத்திடமிருந்து வாங்கிக் கொண்டு உச்சிமோந்து முத்தமிட்டார்கள். ஜெமீன்தாரா கட்டித் தழுவிக் கொண்டார் சொக்கலிங் கத்தை. காளிங்கராயர், முதுகைத் தட்டிக் கொடுத்துப் 'பலே!' என்றார்.