பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மகன் 69 "பிறந்த நாள் விழா அல்ல...இதோ மிஸ்டர் லிங்கம்.. இவருக்குத்தான் பாராட்டு...இவர் உங்களிடம் எப்போதும் வாதாடுவார்....மறுத்துப் பேசுவார். அதனாலேயே இவர் நல்லவர் அல்ல என்று எண்ணிக் கொள்ளக் கூடாது." "நான் அவரைப் பற்றி என்ன எண்ணிக் கொண்டு இருக்கிறேன் என்பது கிடக்கட்டும். இவர் பாராட்டப்பட வேண்டி ஏற்பட்ட காரணம்? 'இன்று என் பேரக் குழந்தை குதிரையின் காலின்கீழ் சிக்கிக் கொள்ள இருந்தது. தக்க சமயத்தில் இவர் பாய்ந்து சென்று காப்பாற்றினார்.” "அப்படியா! என் பாராட்டுதல்! மிஸ்டர் லிங்கம். எப்போதுமே பிறருக்கு உதவி செய்வதைத் தமது இயல்பாக கொண்டவர். அவருக்காக நடத்தப்படும் விழா விலே கலந்து கொள்வதிலே எனக்கும் மகிழ்ச்சி. ஒரு விதத்தில் எனக்கும். அவர் டீச்சர்!ஆமாம்! இந்த அளவு தான் தமிழ் பேசுவது அவ ரால்தான்...அவர் என்னிடம் வாதாடுவார்; நான் சொல்லு வதை மறுப்பார். கோபிப்பார். எல்லாம் சரி. அதனாலே எனக்கு மகிழ்ச்சி... கோபம் அல்ல. தலையாட்டிகள் வெறும் அடிமைகள். அவர்களை எந்த நாட்டிலும் மதிக்க மாட்டார்கள். இவர் உண்மைக்காக—தமக்குச் சரி என்று பட்ட உண்மைக்காக- தைரியமாக வாதாடுவார். அதனா லேயே எனக்கு இவரிடம் தனியான மதிப்பு..." "அப்பா! இப்போதுதான் என் மனம் சாந்தி அடைந் தது. பலதடவை சச்சரவு செய்வது போல வாதாடுவாரே, உங்கள் நாட்டு நடவடிக்கை,பழக்கவழக்கம் ஆகியவைகளைக் கூடக் கண்டிப்பாரே, இங்கே அவரிடம் உங்களுக்குக் கோபம் இருக்கிறதோ என்று பயந்துகொண்டு இருந்தேன். கோபமா! எனக்கா! இப்படிப்பட்டவர்களைத்தான் நான் மதிப்பது. நான் இவரிடம் வைத்துள்ள மதிப்பை தெரி வித்துவிட்டுப் போகவே வந்தேன்.வந்த இடத்திலே விழாவும் நடக்கிறது. என் விழாப் பரிசாகவே ஒரு சந்தோஷச் செய் தியை தருகிறேன். நமது லண்டன் கம்பெனியில் மிஸ்டர்