பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மகன் 71 "யார் செய்தது என்று கேள்! அக்ரமம் என்று சொல்லாதே! "கொலை செய்து விட்டிருக்கிறாய்! 'இன்னும் உயிர் போகவில்லை-சாகடிக்கத்தான் சுட் டேன்... ஏன் தெரியுமா... இந்தக் கிழவன் உன்னைப் பற்றி இழிவாகப் பேசினான்...நீ... சொல்ல எனக்குக் கூச்சமாக இருக்கிறது. குழந்தையைக் கவனிக்காமல் இருந்ததற்காக அந்தக் கிழவியை இரண்டு தட்டு தட்டினேன். பாய்ந்து வந் தான் கிழவன் என் மீது; அடித்து விரட்டினேன். இந்தத் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு வந்தான், என்னைக் கொல்ல; இங்கு காவல் காத்துக் கிடக்கும் நாய்; மT5: சொல்வது சரி. இதுகளுக்கு இப்படிப்பட்ட இழிவான போக்குத்தான் இருக்கும். துப்பாக்கியைப் பறித்துக் கொண் டேன்; சுட்டேன். கருண்டு விழுந்தான்; செத்தான் என்று நினைத்தேன்; கிழட்டுப் பயல் கூவினான்; 'கூப்பிடு! கூப்பிடு என்று.யாரை என்று கேட்கிறேன்; 'என்மகனை!என்மகனை!’ என்கிறான். 'என்னடா உளறல்' என்கிறேன். 'நானா உளறு கிறேன்...உயிர் போகுமுன் உண்மையைக் கூறுகிறேன். மாளி கையிலே இருக்கிறான் என் மகன்! எவ்வோரும் பாராட்டும் அறிவாளன்! சொக்கலிங்கம்!' என்கிறான். 'சமையற்கார னையா சொல்லுகிறாய்' என்று கேட்கிறேன், மிஸ்டர் லிங்கம்! உங்களைத்தான் சொல்லுகிறான்... நீங்கள் மகனாம்! வண்டிக்காரன் மகனாம்!..." அவனுடைய ‘ஆமடா ஆம்! நான் அவர் மகன்தான்! வண்டிக் காரன் மகனேதான் நான்! அவர் குடிசையிலே குமுறிக் கிடந் தார்; நான் மாளிகையிலே வாழ்வதற்காக, இன்னலையும் இழிவையும் ஏற்றுக் கொண்டார், நான் செல்வமும் சீரும் பெறவேண்டுமென்று. மிஸ்டர் நார்மன்! இவர் என் தகப் பனார்..வண்டிக்காரன், இந்த ஜெமீனில்! வாழ்ந்து கெட்ட வர். நான் சிறு வயதிலேயே மாமனால் வளர்க்கப்பட்டு வந்தேன். இங்கு வந்ததே இல்லை... மகனே! 'நாலு பேர் பார்த்து மதிக்கத்தக்க நிலை உனக்கு வரவேண்டும். அதற்கு இந்த ஜெமீனில் வாத்தியார் வேலையை ஏற்றுக் கொள், உனக்கு நிறைய சிபாரிசுகள் கிடைக்கும். பெரிய உத்தியோகம்