பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 வண்டிக்காரன் கிடைக்கும். அதுவரையில் என் ILலின் என்பது மட்டும் வெளியே தெரியக் கூடாது. வண்டிக்காரன் மகன் என்று தெரிந்தால், ஜெமீன் மாளிகையில் இடம் கிடைக்காது' என் றார்! எவ்வளவோ மன்றாடினேன் ... கேட்கவில்லை. சத்தி யம் செய்திடச் சொன்னார்...தத்தளித்தேன். மாளிகை யிலே எனக்கு விருந்து, மகிழ்ச்சி! என் தகப்பனார் இங்கு, குடிசையில், குதிரைக் கொட்டிலில், என் எதிரிலேயே ஏசு வார்கள், கேவலமாக; என் இரத்தம் கொதிக்கும்; கண்ணீர் கொப்பளிக்கும்; அப்போதும் என்னை அந்த உத்தமர் பார்த் துத் தலை அசைப்பார்; என்னை கட்டிப் போட்டு விட்டார்! சீமான்களுடன் சீமாட்டிகளுடன், நான் சாரட்டில் சவாரி செய்வேன்! அவர்தான் வண்டியை ஓட்டிக் கொண்டு வரு வார்! வண்டியின் வெல்வெட்டு மெத்தை என்னை முள் ளாய்க் குத்தும்.. சிறிதளவு குளிர் காற்று வீசினாலும், எங்கள் உடலுக்குக் கம்பளிச் சட்டை - போர்வை! பனி பெய்யும், அவர் எங்களை ஏற்றிக் கொண்டு வண்டியை ஓட்டிச் செல்வார். எல்லாம் எனக்கு இந்தச் சமூகத்தில் ஒரு புதிய அந்தஸ்து தேடித்தர..அம்மா!...அம்மா!... "கிழவியைப் போலீஸ் கொட்டடிக்கு அனுப்பிவிட் டேன்... திருடினாள் பத்துப்படி கொள்...சாட்சி இருக்கி றது..." "மிஸ்டர், தார்மன்? எனக்கு வேண்டும். இந்தத் தண் டனையும் வேண்டும்; இதற்கு மேலும் வேண்டும். மாளிகை யிலே ஒரு போலி வாழ்க்கை எனக்கு. அப்பா சுட்டுத் தள்ளப் பட்டிருக்கிறார். அம்மா மீது திருட்டுக் குற்றம்... "உன் மீது மோசடிக் குற்றம்... ஆமாம்! இவ்வளவு நாள் உன் குடும்ப உண்மையை மறைத்து ஜெமீன் குடும்பத் துடன் உறவாடிய மோசடி...” "மிஸ்டர் லிங்கம்! மிஸ்டர் ஜெமீன்தாரர்! முதலில் செய்யப்பட ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு வேண்டும்...மற்றவை பிறகு--கிளம்புங்கள்..."