பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மகன் 73 சடையப்பனைக் காப்பாற்ற முடியவில்லை--எத்தனை உயர்தரமான மருத்துவர்களாலும். மகனைப் பெரிய உத்யோகத்திலே பார்க்க வேண்டும் என்ற ஆசை ததும்பிக் கொண்டிருந்த இதயம், பேசுவதை நிறுத்திக் கொண்டது. செய்ய வேண்டியது யாவும் செய்துவிட்டேன். சென்று வருகிறேன் என்று கூறுவது போலிருந்தது சடையப்பனின் முகத்தோற்றம். போலீசிலிருந்து விடுவிக்கப்பட்ட தன் தாயின் காலின் கீழ் விழுந்து கதறினான் சொக்கலிங்கம், வண்டிக்காரன் மகன்! சடையன் மகன்! பெரிய குடும்பம்! அந்தஸ்தான இடம் என்று எண்ணிக் கிடந்தோமே, நம்ம வண்டிக்காரன் மகன். அப்பனும் மகனுமாகச் சேர்ந்து நம்மை மடையர்க ளாக்கி விட்டார்களே! ஜெமீன் குடும்பத்துக்கே இழிவு உண்டாக்கி விட்டானே! உமாவையே கொடுக்க இருந்தேனே.. முட்டாள்!---இவ் விதமான பேச்சுத்தான் முதலிலே ஜெமீன் மாளிகையிலே கிளம்பிற்று. ஊர் கொதித்தது. மகனுக்கே அந்தஸ்து தேடிக் கொடுக்க வேதனைத் தீயிலே வீழ்ந்த உத்தமன் சடையப்பன் என்று ஏழையர் உலகம் போற்றிற்று. போலீஸ், காளிங்கராயரைத் தேடிக் கொண்டிருந்தது. சொக்கலிங்கம் அதிர்ச்சி தாங்காமல் படுத்த படுக்கை யாகக் கிடந்தான். நீதியை நிலை நாட்டியாக வேண்டும் என்று நார்மன் வேலை செய்து வந்தார்.