பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மகன் 75 உணர்ச்சியை வளர்க்கக் கூடாது--அது எந்த நாட்டில் இருந் தாலும்... லிங்கம் சொல்வது முற்றிலும் சரி! எங்கள் நாட்டி லேயும் இருக்கிறது. இப்படிப்பட்ட உணர்ச்சி எங்கே இருந் தாலும்,பாம்பு பாம்புதானே." காளிங்கராயரை விடுவிக்க ஜெமீன்தாரர் இலட்ச ரூபாய் வரையில் செலவிட்டுப் பார்த்தார்; பிரபலமான வழக்கறிஞர்கள் வாதிட்டுப் பார்த்தார்கள். பலிக்கவில்லை. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சோகமே உருவான நிலைபெற்றார் ஜெமீன்தாரர்! என்ன செல்வம் இருந்து என்ன பயன்? மருமகனைக் காப்பாற்ற முடியவில்லையே! ஜெமீன் குடும்பத்துக்கு இழிவு ஏற்பட்டது விட்டதே. இந்த இழிவு எப்படி நீங்கும் என்று எண்ணி, சீமைக்குச் சென்று பார்ப்பதென்று முடிவு செய்து, ஜெமீன் நிலத்தை விற்றுப் பணம் திரட்டிக் கொண்டிருந் தார். அதிர்ச்சியில் தாக்கப்பட்டு, படுத்த படுக்கையாகக் கிடந்த சொக்கலிங்கம், மெள்ள மெள்ள நலமடைந்தார். நார்மன் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த விடுதியில் தன் தாயாருடன் தங்கி இருந்தான். பல ஆண்டுகளாக 'அம்மா! அம்மா!" என்ற அந்த அன்பு மொழியைச் சொல்ல வாய்ப்புப் பெறாதிருந்த குறையைப் போக்கிக் கொள்பவன் போல, விநாடிக்கு விநாடி. 'அம்மா! அம்மா!' என்று அழைத்து, 'நான் பாவி அம்மா! நான் பாதகன் அம்மா! காளிங்கராயரல்ல அம்மா அப்பா வைச் சாகடித்தது; என் சுயநலம்-என் மடமை-என் கபட நாடகம் அம்மா! எனக்கு உய்வு உண்டா? நான் மனிதன் தானா!' என்று கூறிக் குமுறிக் கிடந்தான். நார்மன் அவனுக்கு ஆறுதல் கூறிட வந்தார். வெவ்வேறு இனம்-ஒரு இனம் ஆளும் இனமாகவும், மற்றோர் இனம் அடிமைப்படுத்தப்பட்ட இனமாகவும் இருந்