பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 வண்டிக்காரன் திடினும், இருவரும் நல்ல இதயம் படைத்தவர்கள் என்ப தாலே அவர்களின் நட்பு, நேர்த்திமிக்கதாக இருந்தது. நார்மன், எப்படியும் சொக்கலிங்கத்தின் மனம் உடையக் கூடாது என்பதற்காக அன்பு மொழி வழங்கலானார். "மிஸ்டர் லிங்கம்! ஏதேதோ நடைபெற்று விட்டிருந் தாலும், எங்கள் கம்பெனி முடிவு மாறவில்லை. அந்த வேலை உமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது கபட "நன்றி மிஸ்டர் நார்மன்! ஆனால் நான் என் முடிவை மாற்றிக் கொண்டேன். என்னதான் அப்பா வற்புறுத்தினா லும் நான் அந்தக் நாடகம் ஆட் ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது. என்னுடைய உள்ளத்திலும் அடிவாரத்தில் சுயநலம், சுகபோகம் ஆகியவற்றிலே ஆசை இருந்ததால்தான் நான் அந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண் டேன். நானும் ஒரு விதத்தில் குற்றவாளிதான்! அப்பாவைச் சாகடித்தது, துப்பாக்கிக் குண்டு அல்ல; என் மடமை - சமூ கத்திலே கப்பிக் கொண்டுள்ள குருட்டு அறிவு:-இந்த மட மையும் குருட்டுத் தனமும் ஒழிய வேண்டும்...ஒழிக்கப்பட வேண்டும்...அதற்கு நான் இருக்க வேண்டிய இடம் இலண் டன் அல்ல! இங்கு; என் நாட்டில்; தாய்நாட்டில்! என் நாட்டு மக்களிடம்: ஜாதி குலம் சமயம் செல்வம் என்பவை களின் பேரால் இரும்புப் பிடியாக இருந்துவரும் மடமையைத் தொலைத்திட நான் பணியாற்றத் தீர்மானித்து விட்டேன். மன்னிக்க வேண்டும்", "மன்னிப்பதா! மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமைப் படுகிறேன்! பணம் பதவி இவற்றினைத் துறந்திடத் துணி யும் உன் பண்பினை பாராட்டுகிறேன்!' 'பணம் பதவி ஆகியவற்றிலே எனக்கு இருந்து வந்த ஆசைதானே, அப்பா சொன்ன திட்டத்துக்கு என்னை உடன் பட வைத்தது? உணருகிறேன்... திருந்துகிறேன்"... "ஜெமின்தாரர் வழக்கு சீமைக்குப் போகிறது..."