பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மகன் 77 "எங்கே போனால் என்ன? வழக்கின் முடிவு எதுவா னால் என்ன? நான் செய்த குற்றத்துக்கான தண்டனையை நான் அனுபவித்து விட்டேன். வண்டிக்காரன் மகன் மரி வாழ என்றாலும் வாழ முடியும்-பளபளப்பும் போலி யாதையும் கிடைக்காமலிருக்கலாம்--- நாணயமாக முடியும் இந்தப் பரந்த உலகத்தில் என்ற சாதாரண உண் மையை உணர முடியாதிருந்தேன். பாடம் படித்துக் கொண் டேன்; யாரும் கொடுத்திராத கட்டணம் செலுத்தி...என் தகப்பனாரின் உயிரைக் கொடுத்து. பக்கத்திலே கோகிலா வந்து நின்றாள். நார்மன் சொக்கலிங்கத்தைப் பார்த்தார். "என் துணைவியார்!" சொக்கலிங்கம் கூறினான். என்று பெருமிதத்துடன்