பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொலிவு 85 வேலப்பன், இந்தப் பேச்சை எல்லாம் கேட்டு, மேலும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் கொண்டான். கொல்லையைச் சுற்றிப் பார்க்கும்போதெல்லாம், வேலப்பனுக்கு கலியாணப் பந்தலே தெரிந்தது. இவ்விதம் இன்பக் கனவு கண்டு கொண்டிருந்தவனுக் குப் பேரிடி விழுத்தது. 'மார்க்கட் நிலவரம்'-குச்சி; கிழங் குக்குக் ‘கிரிக்கி' இல்லை; வாங்குவார் இல்லை என்ற செய்தி அவனைச் செந்தேள் போல் கொட்டிற்று. முதலிலே, இது யாரோ வேண்டுமென்றே பொறாமையாலே கட்டி விட்டது என்று எண்ணினான்; விவரம் அறிந்துவர நகரம் சென்று திரும்பிய பிறகுதான், அவனுக்கு மனமே உடைந்து விட்டது. அங்கு தெளிவாகவே சொன்னார்கள்; பல கிராமங் களிலே இந்தச் செய்தி தெரிந்து, விவசாயிகள் தலைமேலே கை வைத்துக் கொண்டு கிடக்கிறார்கள் என்று கூறினர். குச்சிக் கிழங்கு, உள்நாட்டிலே செலவாகக்கூடிய பண்டம் என்ற எண்ணத்திலே, விவசாயிகள் அதைப் பயிர் செய்ய வில்லை; எனவே வெளிநாட்டுக்குக் கிழங்கு தேவையில்லை யாம் என்று கூறப்பட்டது கேட்டு யெத்தக் கலங்கிப் போயி னர். "பைத்யக்காரப் பய? யாரோ பட்டணத்துக்காரனுக பேச்சைக் கேட்டு இவனும் கெட்டான்; மத்தவங்களையும் கெடுத்துப்பூட்டான். இவன் பேச்சை நம்பி, குச்சிக் கிழங்கு பயிர் வைத்தவனெல்லாம் 'கோ'ன்னு கதறிக்கிட்டு கிடக்கி றானுங்க - இவனுக்கு என்ன ஒண்டிக் கட்டை - மற்றவங்க - பலபேரு சிறுசும் பெரிசுமா டஜன் கணக்கிலே வைத்துக் கொண்டு கஷ்டப்படறாங்க. இப்ப, இவனா, எல்லாரோட கிழங்கையும் வாங்கிக் கொள்ளப் போறான்" என்று சிலர் பேசினர். வேலப்பனுக்கு ஆத்திரம் வந்தது. 'நானே மனம் வேதனைப்பட்டுக் கிடக்கிறேன்; இந்தப் பாவிகள் வேறு என்னை வாட்டி எடுக்கிறார்களே. செச்சே, என்ன ஜென் மங்களய்யா இதுகள்' என்று முணுமுணுத்தான். செல்லாயி, நிலைமை அறிந்து, சிரித்துப் பேசினாள்! வேலப்பனுக்குக் கோபமாக இருக்கும் என்பதை எண்ணி,