பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 புதிய குளம் வத்திப்போனாலும், எந்தக்கஷ்டம் வந்தாலும், என்ன டாப்பா, கஷ்டத்துக்குக் காரணம்? நான் என்னா செய்ய யணும் சொல்லு? அப்படின்னு கேட்க ஒருத்தன் வந்தானா பார்த்தாயா? எல்லாம் 'ஓட்டு' வரைக்கும்தான், இவனுங்க ளோட ஒட்டு உறவு" என்று துவக்கினான் ஒருவன் -- வேலப் பன் குடிசையில் 'ஆமாம், அப்பொ, ஆயிரத்தெட்டு சிபாரிசு பேசி னானுங்க...கவுண்டரே கவனிச்சிக்கங்க... கோனாரே, கை போட்டுக் கொடுங்க, தேவரே, என்னை உங்களுக்கு இருவது வருஷமாத் தெரியுமே என்றெல்லாம் சொந்தம் பேசினா னுங்க... ஆமாண்டா, விடுடா நமக்குப் அப்ப, உச்சி குளுந் துப் போச்சு. இவ்வளவு பெரிய மனுஷனுங்க, நம்மைத் தேடிகிட்டு வரானுங்கன்னு, நாமும் அவனுங்களுக்காக ஓடி 'யாடி வேலை செய்தோம். ஓட்டுப்போட்டா ஊர் க்ஷேமமா இருக்கப் பாடுபடுவீங்களா, எப்படிச் செய்யப் போறீங் கன்னு ஒரு பேச்சு கேட்டமா? நம்ம ஜாதிக்காரன், நம்ம பக்கத்துக்காரன், என்று எதை எதையோ நம்பினமே தவிர, நாணயமானவனா, யோக்கியமானவனா, நல்லபடி, உழைச்சி ஊருக்கு உபகாரம் செய்யப்போறவனா என்கிற எதைப் பற்றியும் யோசிக்கலே. மகாத்துமா தெரியுமேலேன்னு கேட் டான். ஆமா அவரு என்னங்க, கடவுளோட அவதாமுரன்னு கைகூப்பினோம்; மத்த எதையும் யோசிக்கலே...' "ஏன் யோசிக்கலை! நம்ம காளியாத்தா கோயில் கோபுரத்துக்குக் கலசம் வேணுமுன்னு கேட்டோமே...' அட, அது ஒரு பிரமாதமா ... ஐம்பதோ நூறோ ஆகப்போவுது...அவனுக, என்னதான் வேணும் சொல்லுங்க இதிலே என்ன தப்புங்க, என்னாலானதை நான் செய்ய ணும்னு எனக்கு ஒரு ஆசை. வேறே ஒண்ணுமில்லே. அப்படி இப்படின்னு சொல்லவே, சரி, எதையோ ஒண்ணு கேட்டு வைப்பமேன்னு, கலசம்'" வேணும்னு கேட்டோம்... இது ஒரு பெரிய தப்ப..?'*