பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொலிவு 97 போன வாரத்திலே ஒரு பத்து பேர் என்னை வந்து கேட்டார் கள். (சிரிப்பு ) சிரிக்காதீர்கள். நாடு எவ்வளவு கெட்டு வருகி றது. நம்முடைய ஜனங்களுடைய புத்தி எப்படி மட்டமாகிக் கொண்டு போகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். இப் படிப்பட்டவர்களைப் பற்றித்தான் நமது தேசீய மகா கவி சுப்ரமணிய பாரதியார், "நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாடினார். எனக்குப் பாடத் தெரியாது. மாலையிலே அருமையாகப் பாடப் போகிறார் கள் ஸ்ரீமதி பட்டம்மாள். கேளுங்கள். பூச்சி வந்துவிட்டது; கரப்பாற்றுங்கள் என்று என்னிடம் வந்து அழுதால் நான் என்ன செய்வது? நீங்களே சொல்லுங்கள்? (மீண்டும் சிரிப்பு) பூச்சிகளை ஒன்று விடாமல் பிடித்து நசுக்கிப் போடவா! (பலத்த சிரிப்பு) மந்திரியின் வேலை இதுதானா?.. கரும்பு காய்ந்து போகிறது. கடலைக் கொட்டை கெட்டுப்போகிறது, இரும்பு கிடைக்கவில்லை, நெசவு நடக்கவில்லை, வாழை சரிந்துவிட்டது, வரகரசி முளைக்கவில்லை என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி. மூக்கால். அழுது கொண்டிருந்தால், நாட்டிலே சந்தோஷம் எப்படி ஏற்படும்? இப்படித் தொல்லை கொடுத்தால், நாங்கள் ஆட் சியை நடத்த நேரம் எப்படி கிடைக்கும். (ஒரு சீட்டு தரப் படுகிறது. அதைப் படித்து விட்டு) இதோ பார்த்தீர்களா, புதிதாக ஒரு அழுகுரல், குச்சிக் கிழங்குக்கு மார்க்கெட் இல் லையாம்! (சிரிப்பு) உடனே நிவாரணம் அளிக்கவும் என்று எழுதி இருக்கிறார், ஒரு அன்பர். என்ன நிவாரணம் அளிக்கச் சொல்கிறாரோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்! குச்சிக் கிழங்குக்கு மார்க்கெட் இல்லை என்றால், நான் என்ன செய்ய வேண்டும் என்கிறார்? கூடையில் வைத்துக் கொண்டு தெருத் தெருவாகச் சென்று குச்சிக்கிழங்கோ-குச்சிக் கிழங்கு என்று விற்கச் சொல்கிறாரா?...' (பலத்த கை தட்டல், சிரிப்பு.) அடச் சே! எழுந்திருங்கடா, போவோம். மகாப் பெரிய மனுஷனுங்க' என்று கோபமாக் கூறிக்கொண்டே