பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 புதிய யிவே செத்திருக்கும், மனஷாளுகளே மாண்டு போயிருக் காங்க பலா மாதிரி நோ யாலே...அதுக்காக இப்படியா,மனசு ஓடிஞ்சி போயிட்டேன். பைத்யக்காரப்புள்ளே? போயி, காரி யத்தைப்பாரு. இந்தத் தடவை இல்லாவிட்டா, அடுத்த வரு ஷம் நல்லது ஏற்படுது, என்னா இப்ப? உனக்கு என்னடா குறைச்சல்! எனக்கு இந்தத் தடவை 'சோளம்' நல்லபடி இருக்குது -- போதுமே நமக்கு' -என்று சடையாண்டி பல முறை ஆறுதல் கூறியும் வேலப்பனுக்குத் திருப்தி ஏற்பட வில்லை. விசாரம் அவனை வாட்டியபடி இருந்தது. காரண மின்றிக் கோபம் வரும், கண்டவருடன் வம்புக்குப் போகத் தோன்றும், மாடு கன்றுகள்கூடட அவன் கோபத்தைத் தாங் கிக் கொள்ள வேண்டி வந்தது. செல்லிக்கு அவனைட் டார்க் கும்போது நடுக்கமே ஏற்படும் சுட்டுத் தள்ளிவிடுவது போலப் பார்க்கிறான்! "சுத்தமாகக் கழுவிடணும், தெரியுதா...துளி சேறு இருச்கப்படாது..." என்று கூறி, மோட்டார் ஓட்டிக் கொண்டு வந்தவன் எட்டணாவைக் கொடுத்தான், பொடிப்பயலிடம். அவன் அந்த மோட்டாரை மிகச் சுத்த மாகக் கழுவித் துடைத்துக் கொண்டிருந்தான். அலுப்பி னாலே, மரத்தடியில் துண்டு விரித்துப் படுத்துத் தூங்கிவிட் டான், மோட்டார் ஓட்டிக்கொண்டு வந்தவன். அவன் விழித் தெழுந்ததும், சொல்லிவிட்டுப் போகலாம் என்று, பொடிப் பயல் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். வேலப்பன் அந்தப் பக்கம் வந்தவன், காருக்குப் பக்கத் திலே சிறுவன் இருப்பதைக் கண்டு, "ஏண்டா? ராத்திரிக் கூடச் சாப்பிடலயே, காலையிலே எங்கே சுத்த வந்தூட்டே, கஞ்சி கொடுக்கத் தேடினேன், காணமே ...ஆமா, இது என்ன மோட்டாரு.... இவரு யாரு, துரை, சொகமாத் தூங்கறாரு?" என்று கேட்டான். "பார்த்தயாண்ணேன், எட்டணா . எருமைமாடு மூணு தேச்சிக் கழுவற மாதிரிதான், இருந்திச்சி - இந்த மோட்டா ரைக் கழுவி விட, எட்டணா கிடைச்சுது! மந்தை எருமையை மேய்ச்சி தேய்ச்சி குளிப்பாட்டி விட்டாக்கூட, கால்காசு