பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொலிவு 99 “ஏம்பா. நீ சொல்கிறபோது 'ஜேபபாத்தான் இருக்கு திட்டம். பிற்பாடு யோசிக்கறப்போ,பயம் ஏற்படுதே. புது வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை அடிச்சிக்கிட்டும் போவுது என்பார்களே, அதுபோல. புதுசா ஏதாச்சும் செய்ய ஆரம்பிச்சி உள்ளதும் போயிட்டா என்ன:: செய்யறது என் கிற திகில்தான்... உனக்குக் கொடுத்து வைக்கலேன்னு சொல்லு. கோழி அடைகாக்கற மாதிரியா, உனக்கு இந்தப் பெஞ்சிலே உட் கார்ந்து பழக்கமாயிட்டுது...வேறே யோசனை உதிக்கிற தில்லே..." வேலப்பன், தன் வேட்டியும் சட்டையும் அழுக்காகி விட்டதால் வெளுக்க, சோப் வாங்குவதற்காக வந்தான். அவன் இலவசமாகத் தங்கியிருந்த இருளப்பன், மில்லில் தொழிலாளி; ஆறுகுடித்தனத்துக்கு நடுவில் இருந்துவநதான். குளிக்க, துணி துவைக்க பொதுக் குழாய்தான் வேலப்ப னுக்கு. "சோப்புக் கட்டி ஒண்ணு.' "யாரடா,தம்பி! புதுசா இருக்கே? நீ ஒரு சோப்புக் கட்டி கேட்கிறபோதே எனக்குப் புரிஞ்சிப் போச்சு, நீ டவு னுக்குப் புதுசு என்பது. எந்த ஊரு? என்று மூசா அல்ல, முத்தையன் கேட்டான்-கேட்டுவிட்டு, மூணுகட்டி கொண்ட பாக்கெட்டு நாலணா விலை-ஒரு கட்டியா வாங்கினா ஒண் ணரை அண்ா ஆகுது;பாக்கெட்ட வாங்கினா இலாபமாச்சே! அதுகூடத் தெரியாதவனா இருப்பதைப் பார்த்துத்தான் நீ டவுனுக்குப் புதுசுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்” என்று முத்தை யன் விளக்கம் கொடுத்தான்-மூசா ஒரு பாக்கெட் கொடுத் த. ர்-பணம் கொடுத்தான் வேலப்பன். புத்தியை முத்தைய னிடம் பறி கொடுத்தால். தொழில் மாதம் மூன்று ஆவதற்குள் ஆறு வகையான வியாபாரத்தில் தொடங்கி செய்தாகிவிட்டது—அத்தர் வத்தல் வியாபரம் வரையிலே நடந்தது.--பணம் மிச்சம் பத்துப் பதினைந்து என்ற அளவு வந்த பிறருதான், மறுபடி