பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தமிழ் வளர்ச்சியில மணவையார் செய்த புரட்சி


கிறாரே என மணவை முஸ்தபாவின் உள்மனம் ஒருபுறம் துடித்தாலும் அதை வெளிக்காட்டாமல்,

"தமிழ் படித்தால் தமிழாசிரியர் வேலைக்குத்தான் போக வேண்டுமென்று கட்டாயமில்லையே'. மற்ற துறைப் படிப்பெல்லாம் பணம் சம்பாதிக்கவும், பதவி சுகம் பெறுவதற்காகவும் மட்டும் பயன்படலாம். ஆனால், தமிழ் படிப்பதன் வாயிலாக தாய்மொழி அறிவை வளர்த்துக் கொள் வதன் மூலம், தமிழ் வளர்ச்சிக்கு உதவவும், தாய்மொழி மூலம் அறிவு வளர்ச்சிக்குப் பாடுபடவும் முடியுமே; அதற்காக நான் ஏன் தமிழ் படிக்கக் கூடாது?" என்று எதிர்வினா தொடுத்தார். (காலம் தேடிய தமிழனின் அறிவியல் தமிழ் வரலாறு - பக்கம் 150)

இவரது உணர்வையும் விருப்பத்தையும் முழுமையாக ஏற்ற பேரா. தெ.பொ.மீ. அவர்கள் "ரொம்ப நல்லது. நோக்கமேதும் இல்லாமல் வெறுமனே எளிதாகப் படிக்கலாம்னு தமிழ் படிக்க வந்திருக்கிறாயா இல்லை ஏதேனும் குறிக்கோளோடு தமிழ் கற்க வந்திருக்கியான்னு தெரிஞ்சுக்கத்தான் உன் ஆர்வத்துக்கு எதிராக இப்படியெல்லாம் கேள்வி கேட்டேன். படிப்பானாலும் அல்லது வேறு எந்தச் செயலானாலும் ஏதாவது ஒரு நோக்கத்தை முன்வச்சு செயல்படணும். அது உன்கிட்டே கொஞ்சம் இருக்கிறதாக நெனக்கிறேன். உனக்கு என் வாழ்த்துக்கள்" என்று கூறி சிறப்புத் தமிழ் பட்ட வகுப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கினார் பேரா. தெ.பொ.மீ. (காலம் தேடிய தமிழனின் அறிவியல் தமிழ் வரலாறு பக்கம் - 150).

எதிரும் புதிருமான இந்த முதல் சந்திப்பே தெ.பொ.மீ மனதில் மணவை முஸ்தபாவும் மணலை முஸ்தபா மனதில் தெ.பொ.மீ.வும் அழுத்தமான இடம்