பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைகளில் இயற்கையாக எழுந்த ஈடுபாடும், தகைமை சான்ற புலவர்களின் இலக்கியங்களை கற்று பண்பட்ட உள்ளமும், கலைகளைச் சென்று கண்டு, கண்டு இன்புறும் ஏற்றமும், தான் கண்ட இன்பத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் எழுத்து ஆற்றலும் உள்ள ஒருவரால் தான் கலை ஆர்வத்தைப் பிறரிடம் தட்டி எழுப்ப முடியும், இவையனைத்தும் ஒருங்கே பெற்று, செயலும் ஆற்றிய தமிழ் தாயின் தவப்புதல்வர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் ஒருவரே.

கலை வரலாறு என்பது புதியதொரு இயக்கம். மேலை நாடுகளில் இவ்வியக்கம் மிகச் சிறந்த நிலையை அடைந்துள்ளது. எண்ணற்ற நூல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. தமிழ் மொழியில் கலை வரலாற்றைக் கூறும் நூல்கள் எவ்வளவு இருக்கின்றன என்றால் மிகச் சிலவே. அவற்றிலும் சிறந்தவை எவை என்றால் திரு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களது நூல்களே எனினும் அது மிகையாகாது. எண்ணற்ற தமிழ் மக்களின் மனத்தில் கலை இன்பத்தை ரசிக்கப் புகட்டியவர் அவர். அவர் எழுதிய கட்டுரைகளை ஆர்வத்தோடு படித்த எண்ணற்ற தமிழ் இதயங்கள் இதை நன்கு அறியும். அவர் எழுத்தில் திறன் உண்டு; தெளிவு உண்டு; சுவை உண்டு; கவிதை உண்டு. நாவலாசிரியருக்கும், வரலாற்று ஆசிரியருக்கும் வேறுபாடு உண்டு.

நாவலாசிரியர் கற்பனைச் சிகரத்தையே எட்டி மக்களை மகிழ்விக்கலாம். வரலாற்று ஆசிரியர் வரலாற்றுக்குப் புறம்பானதை எழுத முடியாது; எழுதவும் கூடாது. ஆதலின் வரலாற்று நூல்கள் சுவையுள்ள நூல்களாக அமைவது கடினம். திரு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களுடைய நூல்கள் கலை வரலாற்றை சித்திரிப்பவையாயிருந்த போதிலும் மிகவும் சுவையாக எழுதப் பெற்றவை. எவ்வளவோ நூற்றாண்டு