பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் சீமயத் துறையில் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர் இந்த ஞானச் செல்வர். இறுதிக் காலத்தில் வடலூரில் சோதியிற் கலந்தவர். சாதி வேறுபாடு முதலிய எல்லா வேறுபாட்டையும் கடந்து நின்ற வள்ளல். இவர்தம் சமரச சன்மார்க்க நெறி வைணவர்களின் திருமால் நெறி யையும் சைவர்களின் சித்தாந்த நெறியினையும் இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது. 1. வள்ளலின் வாழ்க்கை வரலாறு இப்பெருமான் சோழவள நாட்டில் தென் ஆர்க்காடு மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் சிதம்பரத்திற்கு வட மேற்குத் திசையில் பத்துக்கல் தொலைவில் உள்ள மருதூர் என்ற சிற்றுரில் பிறந்தார். இவர்தம் பெற்றோர் கள் இராமய்யப் பிள்ளை, சின்னம்மாள் என்போர். இவர் கள் சமயம் சைவம், குலம் வேளாண்குலம், மரபு கருணிகர் மரபு. தந்தையார் கிராமத்துக் கணக்கப் பிள்ளை; பாடம் போதிக்கும் கணக்காயராகவும் திகழ்ந் தார். தாயார் செங்கற்பட்டு மாவட்டத்தில் பொன்னேரிக் கருகிலுள்ள சின்னக்காவணம் என்ற சிற்றுாரில் பிறந்த வர். இராமய்யப் பிள்ளையின் ஐந்து துணைவியரும் ஒருவர் பின் ஒருவராக மரிக்கவே இப்பெருமாட்டியை ஆறாவது துணைவியாக ஏற்றவர். இவர்கட்கு ஏற்பட்ட மக்கட் செல்வங்களில் சபாபதி, பரசுராமன் என்ற இரண்டு ஆண் மக்கள்; உண்ணாமுலை, சுந்தரம் என்ற இரண்டு பெண்மக்கள். சிவனடியார்போல் வந்த இறை இராம. -2