பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் - 塔 13 苯 தொண்டை நாட்டுத் திருப்பதிகள் 22இல் ஒன்று. சாலி கோத்திர முனிவர் சயனிப்பதற்கு எவ்வுள்' என் வினவி யதால் இத்திருத்திருத்தலம் திருஎவ்வுள்" எனத் திரு நாமம் பெற்றது. திருஎவ்வுளுர் எனவும் வழங்கப் பெறும். இன்று இது திருவள்ளுர் என வழங்குகிறது. சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் இருப் பூர்தி வழியில் இஃது ஒரு நிலையம். நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ளது இத்திருத்தலம். பெருமாள் - வீரராகவர்; தாயார் - கனகவல்லி. திரு மங்கை மன்னனும் திருமழிசை பிரானும் மங்களசாசனம் செய்துள்ளனர். பெருமானைப் போற்றி ஐந்து பாடல் களை அருளியுள்ளனர் அடிகள். இரண்டாம் திரு முறை யில் வீரராகவர் போற்றிப் பஞ்சகம்’ (102) என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்கள். பாண்டவர் துரத னாகப் பலித்தருள் பரனே போற்றி நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி தூண்டலில் லாமல் ஓங்கும் சோதிநல் விளக்கே போற்றி வேண்டவர் எவ்வு ளுர்வ.ழ் வீரரா கவனே போற்றி (2) என்பது இதன் இரண்டாம் பாடல். அடிகள் வழிப்பட்ட திருத்தலங்களுள் இரண்டு திருமால் திவ்விய தேசங்க ளாம். அவை () திருஎவ்வுள்; li) திருக்கண்ணமங்கை. அடிகள் திருமால் பரமாக அருளிச் செய்தவை வீரராக வர் போற்றித் திருப்பஞ்சகம்’, ‘இராமநாமப் பதிகம்’, 'இராமநாம சங்கீர்த்தனம்’ ஒன்று, 'திருக்கண்ண மங் கைத் துதி ஒன்று ஆகப் பதினேழு பாசுரங்களாகும். 2. இந்த ஆசிரியர் எழுதியுள்ள தொண்ட நாட்டுத் திருப்பதிகள் காண்க. (கழகத்தில் கிடைக்கும்)