உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருட்டு ராஜா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்13



“சாலையிலே ரெண்டு மரம்
சர்க்காரு வச்ச மரம்!
எனக்கேத்த தூக்கு மரம்
தங்கமே தில்லாலே
உனக்கு ஏத்த மரமடியே
பொன்னுமே தில்லாலே!”

அந்தப் பாட்டின் ஒலி குறைந்து, தூரத்தில் தேய்ந்து மங்குகிற வரை திண்ணையிலேயே இருந்த தங்கராசுக்கு ஆச்சரியம் தணிய வழி பிறக்கவில்லை. முத்துமாலை ஏன் இப்படி ஆனான் என்று அவன் மனம் குறுகுறுத்துக் கொண்டுதானிருந்தது.

2

முத்துமாலைக்கு முப்பத்தைந்து அல்லது முப்பத்தாறு வயது இருக்கலாம். கில்லாடித் தோற்றம் எதையும் அவன் முகம் கொண்டிருக்கவில்லை. ரெளடிகள் என்றால் பெரிய வெட்டரிவாள் மீசையோ, ஆட்டுக்கொம்பு மீசையோ, அது போன்ற ஏதோ ஒரு மீசையோ வைத்திருப்பார்கள்; சதா அதை முறுக்கேறும்படி திருகிவிட்டுக் கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான கருத்துக்கு மாறாக விளங்கினான் அவன். அவன் மீசை வைத்துக்கொள்வதில் ஆசை காட்டியதேயில்லை. சிறிது அகன்று பரந்த பெரிய முகம், அலை அலையாய் படிந்திருந்த கரிய கிராப்புத் தலை. சாதாரணமாகச் சிரித்துப் பேசுகிற வேளைகளில் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/15&oldid=1143518" இலிருந்து மீள்விக்கப்பட்டது