9
‘அவனே நான் நல்லாக் கவனிக்கலியே. அவளைத் தான் பார்த்தேன். இருந்தாலும், பார்வையிலே பட்டதிலிருந்து பெரிய மனுசனாகத்தானிருக்கும்னு தீா்மானிக்க வேண்டியிருக்கு. மூஞ்சி சரியாகப் பார்வையிலே படலே. நாற்பது நாற்பத்தைந்து வயது ஆசாமி, பணமும் அந்தஸ்தும் பெற்றவன் மாதிரித் தோணிச்சு, அதுக்குள்ளே காரு என்னைக் தாண்டிப் போயிட்டுது பங்களாவுக்குத்தான் போச்சு’ என்றான் கண்ணால் கண்டவன்.
இவ்வளவு கண்டு விட்டதால் அந்தக் கும்பலில் அவன் பெரியவனாகி விட்டான்! ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்டுத் தொணதொணத்ததால் அவள் எாிந்து விழ நோ்ந்தது. பணக்காரன் கூட்டிவந்த ‘சோக்கான உருப்படி’யைப் பார்த்து விட்டானே பயல் என்ற ஆற்றாமையினால் சிலர் அவன்மீது கிண்டல் சொற்கள் எறிவதில் மனத் தினவைத் தீர்த்துக் கொள்ள முயன்றர்கள்.
‘நீ சுத்த சோப்ளாங்கியடா! அவன் எப்படிப் பட்டவன்கிறதைக் கவனிக்காமல் போயிட்டியே. எவளோ ஒரு பொம்பிளையைப் பாத்ததும் ஈயின்னு இளிச்சுக்கிட்டு நின்னுட்டானய்யா. தேன் குடிச்ச நரியாட்டம்!' என்று கேலி பேசினர். என்றாலும், அந்த ‘பிக்சர்னு பிக்சர்தான்' பியூட்டியைக் கண்ணால் பார்க்கும் வாய்ப்பு கூடத் தங்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்ற ஏக்கம் தீரவில்லை அவர்களுக்கு.
2
‘ரெண்டுங் கெட்டான் புரத்தின் மணலாற்றிலே கூடச் சிலசமயம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதுண்டு. மழைகாலத் தில் மாதக்கணக்காக கொஞ்ச நீர் சலசலத்து உருண்டாேடும். சில தினங்களிலே பெருவெள்ளம் பொங்கிப்