உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 31 கவிஞர் நித்த நித்தம் உழைத்தலுத்துச் சோற்றுக்கு ஏங்கித் தவிக்கும் எளிய மக்களையும் மறக்கவில்லை. எனவே, உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில் ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு கினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை கித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்தமக்கள் சிறிதுகூழ் தேடுங்கால் பானைஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின்நிலவே உனைக்காணும் இன்பங் தானோ! -புரட்சிக்கவி என்று பாடினார். அதனைப் பின்பற்றி"வாணிதாசர் முகில்" என்னும் பாடலில் முகில் வேறுபாடற்ற கான்மை கொண்டதென்று விளக்குகின்றார். விளைவயல், பொட்டல் என்ற வேற்றுமை கருதாதென்றும் அளித்துயிர் ஓம்புகின்றாய்! அன்னையே முகிலே வாழி! விளைவினை மக்களெல்லாம் பொதுவாகத் துய்க்கும் மேன்மை முளைத்திடில் தமிழர் நாட்டில் முளைத்திடும் இன்ப வாழ்வே இத்துடன் நிலவைப்பற்றி முடியரசன் பாடும். பொதுவுடைமை ஆட்சியினை யிரவுப்போதில் புரிகின்ற முழுமதியே என்ற அடியை இயைபுபடுத்திப் பார்த்தல் பயன்தரும்.