பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

அதே போன்று புற வாழ்க்கையிலே ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அறிவியல் அடிப்படையில் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் புறவாழ்க்கைப் பிரச்சினைகள் எளிதாகத் தீர்க்கப்பட்டு விடும். இதுதான் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தந்திருக்கும் பிரச்சினை தீர்வு முறை.

ஆன்மீகமும் அறிலியலும் வெவ்வேறல்ல

ஆன்மீகமும் அறிவியலும் நேர்மாறானவை என பலரும் நினைக்கிறார்கள். ஆன்மீக அடிப்படையிலான மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் நேர்மாறானவை, எதிரி எனக் கருதுவோரும் உண்டு. சுருங்கச் சொன்னால் விஞ்ஞானம் வேறு; மெய்ஞ்ஞானம் வேறு என்பதில்லை. இரண்டும் இரு கண்களைப் போன்றது. இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டிருப்பது.


வீட்டிலிருக்கும் வரை நான் தனி மனிதன். ரோட்டில் கால் வைத்துவிட்டால் நான் சமுதாய மனிதன். இருவகைகளும் எப்படி ஒன்றுக்கொன்று எதிரானதாய் இருக்க முடியும். ஒரே மனிதன் இரண்டு விதங்களிலே - இரண்டு முறைகளிலே - பிரச்சினைக்குத் தீர்வு காண்கின்ற ஒரு சூழலைத்தான் இஸ்லாம் மிக அழகாக வகுத்தளித்துள்ளது. அகவாழ்க்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆன்மீக - மெய்ஞ்ஞான முறையை எடுத்துக்கொள். புறவாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்க அறிவியலை - விஞ்ஞான முறையை எடுத்துக்கொள் என்று அழகுபடக் கூறுகிறது.


மனிதனை ஆய்வது மெய்ஞ்ஞானம்
உலகை ஆய்வது விஞ்ஞானம்

மெய்ஞ்ஞானம் என்பது தத்துவார்த்தமானது. 'தத்துவம்' என்றாலே சிலருக்கு மலைப்பு. ஒருவன் தத்துவம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் கூறும் முறையில் இருட்டறையில் இல்லாத கறுப்புப் பூனையைக்