உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 13 'உடற் பயிற்சியா? என்ன உளறுகின்றீர்? உதவாக்கரைச் செயலுக்கு வேறு பெயர்தான் உடற்பயிற்சி.” 'வேலையற்றவன் செய்கின்ற வீண்முயற்சி திமிர் பிடித்தவர்கள் தேடித் திரிந்து, ஒடி ஆடி செய்யும் இழிந்த காட்சி 'நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது உடலை ஏன் வாட்ட வேண்டும்? வருத்த வேண்டும்? வாழத் தெரியாத வகையற்றவர்கள்.” 'தலைக்கு GDGaు இருக்கிறது வேலை! தனியாக இதை நினைக்க நேரமேது செய்வதற்கு ஒய்வேது? ஒழிவேது?" - 'ஏதோ பிறந்தோம் இருந்தோம்! வாழ்ந்தோம், என்று வாழாமல் இதெல்லாம் என்ன? சிரங்குப் பிடித்தவன் கையும், இரும்பு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது! அதேபோல்தான் உடற்பயிற்சி செய்பவனும்!” உடற்பயிற்சி என்றவுடன், உறுமும் புலியை ஒரடிப் பக்கத்திலே கண்டுவிட்டபேடிகளின் உளறலைப்போல, உதிர்த்த வாசகங்கள்தான் மேலே உள்ளவை! உடற் பயிற்சியைப் பற்றி சிந்திப்பவரை விட, முச்சந்தியிலே நின்று கூச்சலிடும் குடிகாரர்கள் போல, கண்டபடியெல்லாம் பேசுவோரே நம்மிடையே நிறையப் பேர் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி நமக்கு ஆத்திரமில்லை. அவர்கள் வந்த வழி, வளர்ந்த வளர்ப்பு, பெற்ற அனுபவப் படிப்பு
பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/15
Appearance