2O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா என்பது வெளி உலகில் ஏதாவது ஒரு பலனை எதிர் நோக்கிச் செய்கின்ற காரியமாகும். அது வாழ்க்கையை நடத்திச் செல்ல உதவும் ஒரு செயலுக்கம்! விளையாட்டு என்பது விருப்பத்துடன் செயல்படுகின்ற காரியம். அது பொழுதினைப் போக்கவும், மகிழ்ச்சியைப் பெறவும், பிறரை வெல்லவும், பயன்படும் காரியம். அதாவது, அடுத்தவரை எவ்வாறு வெல்ல வேண்டும்? அவரைவிடத் திறன் நுணுக்கங் களில் எவ்வாறு மேம்பட வேண்டும்? போட்டிகளில் எவ்வாறு விளையாட வேண்டும்? புகழ் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆடுகின்ற இன்பகரமான செயலே விளையாட்டு. இது மற்றவர்களுடன் மகிழ்ச்சியாகக் கலந்துறவாட வைக்கின்ற மாண்புமிகு காரியந்தான். விளையாட்டிலும் உடலியக்கம் இருக்கிறது. பயனை எதிர்பார்க்கின்ற வேலை இருக்கிறது. மகிழ்ச்சி கொள்கின்ற செயல் இருக்கின்றது. உடலை உறுதி செய்கின்ற பண்பும் ஆற்றலும் பதிந்து இருக்கிறது. ஆனாலும், இவையெல்லாம் உடற் பயிற்சிக்கு என்றும் ஈடாகாது, இணையாகாது! நீங்கள் என்ன சொல் கிறீர்கள் என்று கேட்க வேண்டும் போலத் தோன்றுகிறதல்லவா! ஆமாம்! உடற்பயிற்சியின் தன்மை வேறு; மென்மை வேறு செயல் வேறு செம்மாந்த நோக்கம் வேறு!
பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/22
Appearance