28 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பெற்றுக்கொண்டு வந்து நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புக்களிடம் சேர்க்கிறது. கூன வைத்திடும் குளிர்காலமாக இருந்தாலும் சரி, கொளுத்தும் கோடை காலமாக இருந்தாலும் சரி, உடலின் வெப்பநிலையை 98.4 °F அளவிலேயே உடல் வைத்திருக்குமாறு இரத்தம் காக்கிறது. வெப்ப சக்தி குறைந்திருக்கும் உடல் பகுதிக்கு, மற்ற இடங்களில் இருந்து வெப்பத்தைக் கடத்திக்கொண்டு சென்று, உடல் சீரான நிலையில் செழிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இவ்வளவு பொறுப்புடனும் சிறப்புடனும் பணியாற்றும் இரத்தத்தைக் காப்பாற்றிக் கொண்டால் தானே, சுத்தமாக வைத்துக்கொண்டால் தானே சுகமாக நாம் வாழலாம்? - இரத்தத்தைத் தூய்மையாக வைத்துக் காப்பது உடற்பயிற்சியே! உண்மைதான்! இரத்தம் என்பது தண்ணிரைவிடக் கொஞ்சம் அடர்த்தியான திரவம். அது, சிவப்பு:அணுக்கள் வெள்ளை அணுக்கள், மஞ்சள் திரவம் என்ற மூன்றினாலும் முழுமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இரத்தம் ஏன் சிவப்பாக இருக்கிறது என்றால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களே மிகுதியாக இருக்கின்றன என்பது எல்லோருக்குமே தெரியும். மிகுதியாக என்றால் எவ்வளவு? ஒரு வெள்ளை அணுக்குள் 500 சிவப்பு அணுக்கள் என்ற அளவில் சிவப்பு
பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/30
Appearance