இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 37 4. உடற்பயிற்சியால் உண்டாகும் நண்மைகள் 'என்னவோ செய்கிறோம், எதையோ பெறுகிறோம், என்று ஏனோதானோவெனச் செய்வது அல்ல உடற்பயிற்சி, இதைச் செய்கிறோம். இப்படிச் செய்தால் தான் நமக்குப் பயன் கிடைக்கும் என்று எதிர்பார்த்துப் பெறுவதுதான் உடற்பயிற்சி. அதுவே உத்தம நோக்கம். வைத்திய நூல், விஞ்ஞான நூல், இயற்கை நூல், சுகாதார நூல் அத்தனையும், உடலை உறுதியாக்கவும் அழகுபடுத்தவும் கூடிய வாய்ப்பையும் வல்லமையையும் உடையது உடற்பயிற்சியே' என்று ஒத்துக் கொண்டிருக் கின்றன. விஞ்ஞான பூர்வமாகவே விளக்கமும் தந்திருக்கின்றன. - * உடலையும் உயிரையும் சமமாகப் பேணும் உயர்ந்த கலையே உடற்பயிற்சியாகும். வாழ்க்கைக்கு ஏற்ற முறையில், போற்றிக் காக்கும் வழிகளைக் காட்டி, எழிலுற நடத்திச் செல்வதே உடற்பயிற்சியாகும்.