உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா வாழ்க்கையை வளம்பெற வைக்கும் முக்கியமான வழிமுறைகளைப் பத்தாகத் தொகுத்துத் கூறுவார் பண்பட்ட அறிவாளர்கள். இவைகளே வாழ்க்கையின் உயிர் நாடி தூய காற்று, சூரிய ஒளி, உடற் பயிற்சி, குளியல், ஆடை, உணவு, நீர், மணவாழ்க்கை, தூய்மை, ஓய்வு என்ற பத்து முறைகளையும் பாங்காகவும் பணிவாகவும் பின்பற்றி வருவோர். நோயற்ற வாழ்வையும் குறைவற்ற இன்பத்தையும் பெற்று வாழ்வார். இனி உடற்பயிற்சியால் உண்டாகும் நன்மைகளைக் காண்போம். (1) உடலிலுள்ள தசைகளை நன்றாக இயக்கி வலுவுள்ளவைகளாகவும், பொலிவுள்ளவைகளாகவும் மாற்றுகின்றது. - இதனால் தசைகள் எப்பொழுதும் உழைப்புக்குத் தயாராகவே இருக்கின்றன. பந்தயக் குதிரை போல எந்த நேரமும் வேலை செய்யக் காத்திருக்கும் விழிப்புணர்ச் சியை, சுறுசுறுப்புத் தன்மையை, சோம்பலற்ற ஆற்றலைத் தசைகளுக்கு உடற்பயிற்சி தருகிறது. எங்கெங்கே உடல் உறுப்புக்களுக்குத் தேவையான தசையமைப்பு தேவையோ, குறிப்பாக, முன்கை, இரு தலைத் தசை, மார்புத் தசை, தோள் பாகம், தொடை, கெண்டைக் கால் போன்ற இடங்களில் எல்லாம் தசைகளை அழகுற வடித்துத் தோற்றத்தில் ஏற்றத்தையும் எழிலையும் அல்லவா நிரப்பி விடுகிறது. உடம்பு முழுதும் பரவியிருக்கின்ற தசைப் பாகம் - உடலைக் குண்டாகவும், தடியாகவும் காட்டிவிடும். அவை தொள தொள எனவும், கொழுகொழு எனவும் இருக்கும். அவற்றால் உடலுக்குப் பாரமே தவிர, பயனல்ல.