44 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இறுகுகிறது. പിക്കഥ பெறுகிறது. எனவேதான் உடற் பயிற்சியை எந்தப் பயனுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பர் ஆராய்ச்சி அறிஞர்கள். (7) நிம்மதியான உறக்கத்தை நல்குகிறது. தூக்கத்திற்குத்துக்க மாத்திரையைத் தேடி ஓடுகின்ற மக்கள் நிறைய பேர் உண்டு. ஏக்கத்திலும், ஏமாற்றத்திலும். வாழ்வின் துன்பங்களிலும் வாடுகின்ற மனிதர்களுக்குத் தூக்கம் எங்கே வரும்? தூக்கம் வராவிட்டால் அவர்கள் கதி என்னாகும்? கண்களில் குழி விழும். கன்னங்கள் ஒட்டிவிடும். கைகால்கள் அசதியடையும், வயிற்றில் பசி குறையும். ஜீரண உறுப்புக்கள் அவதியுறும் பிறகு, நோய்க்கு நல்ல நேரந்தானே! ஆகவே, மனிதனுக்கு ஆண்டவன் கொடுத்த அற்புத வரப்பிரசாதம் தூக்கம்தான். படுத்த உடன் தூங்குபவனுக்கும், படுக் கைவிட்டு எழுந்த உடன் காலைக் கடன்களை முடிப்பவனுக்கும் நோயே கிடையாது. அதை விட்டுவிட்டு, படுக்கையில் படுத்ததும் ஆயிரம் நினைவுகளைக் கொண்டு வந்து குழப்பிக்கொண்டு, அப்படியும் இப்படியும் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு, அவதியடைவோர்கள் அத்தனை பேருக்கும் ஆறுதல் தருகின்ற அற்புத சக்திதான் உடற்பயிற்சி. நன்றாக இயங்கிய உடலுறுப்புக்கள் நிம்மதியாக ஓய்வைப் பெறுகின்றன. தூக்கத்தில் ஓய்வில்தான்
பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/46
Appearance