46 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மூன்று நாள் தொடர்ந்து உறங்காமல் கண்விழித்தால் மனக் கோளாறு வந்துவிடும் என்று உளநூலறிஞர்கள் கூறுவார்கள், எனவே, மன அமைதியைக் காக்கவும், அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட அல்லல்களையும், அசம்பாவித நிகழ்ச்சிகளையும், குழப்பங்களையும், கொடுமைகளையும் மறந்து, நிம்மதியாக உறங்க வைக்கின்ற மாமருந்தாக, நல்ல விருந்தாக உடற்பயிற்சி இருக்கிறது. - (8) வாழ்க்கையில் வீரத்தை வழங்குகிறது. 'கோழை தினந்தினம் சாகிறான், வீரன் ஒரே முறைதான் சாகிறன்' என்பது பழமொழி. மனிதனுக்கு வீரம் எப்பொழுது இருக்கும் என்றால், உடலில் வலிமையிருந்தால் தான். போர்க்களத்திலே சிப்பாய்கள் பாய்ந்து வரும் குண்டுகளுக்குப் பயப்படாமல் முன்னேறிப் போகின்றார்களே, அந்த ஆற்றல், ஆண்மை, அஞ்சாத வீரம் அவர்களுக்கு எப்படி வந்தது? முறையான பயிற்சியால் வந்த கட்டுமஸ்தான தேகத்தால்தான். உள்ளுறுப்புக்கள் வளர வளர, செழுமை அடைய அடைய, இதயம் வலிமை பெறுகிறது. உடல் வலிமையால் உள்ளமும் வலிமை பெறுகிறது. அதனால்தான் நல்ல உடலில் நல்ல மனம் வளருகிறது என்று முன்னோர் உடலைக் காத்தனர். உடற் பயிற்சியை விரும்பினர். விருப்பத்துடன் செய்து மகிழ்ந்தனர்.
பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/48
Appearance