30
உலகத் தமிழ்
நான் சென்றபோது நல்ல கோடைக் காலம். ஐரோப்பிய நகரங்கள் பலவற்றிலிருந்து கோடை விடுமுறைக்கு வந்துள்ளவர்களை எங்கும் கண்டேன். எப்பக்கம் நோக்கினும் உணவுச் சாலைகள்; சிற்றுண்டிக் கடைகள்; ஐஸ்கிரீம் விற்பனைக்கான பெட்டிக் கடைகள்.
ஜினிவா விமான நிலையத்தில் ‘தானேற்றி’ எக்ஸ்கலேட்டரில் செல்ல வேண்டியதாயிற்று. அது எனக்குப் பிடிப்பதில்லை. வேறு வழி? பல்லைக் கடித்துக் கொண்டு. சமாளித்து விட்டேன். சுங்கச் சாவடியில் நேரமாக வில்லை; நொடியில் என்னை அனுப்பிவிட்டனர். மேனாடுகளில் பெட்டி தூக்க ஆள் கிடைப்பது அரிது. தள்ளு வண்டியில் பெட்டியை ஏற்றி நானே தள்ளத் தொடங்கினேன். பத்தடி தள்ளியதும் நண்பர் திரு. சிதம்பர நாதன் இந்த நோஞ்சானிடமிருந்து அதைப் பறித்துக் கொண்டார். இவரைப் பற்றிப் பின்னர் சொல்கிறேன்.
திரு. சிதம்பரநாதன் தம் காரில் என்னை ஒட்டலுக்கு அழைத்துச் சென்றார் பெட்டியை அறையில் வைத்துவிட்டு ஜினிவாவைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம்.
ஜினிவா ஏரியின் தென் கோடியில், பொங்குபுனல் உண்டு. இது இயற்கையானதன்று; செயற்கையானது. இயந்திர உதவியால் நீர் பொங்கி, உயர்ந்து விழ்கிறது. எவ்வளவு உயரம் பொங்கி எழுகிறது? சுமார் 160 மீட்டர் உயரத்திற்குப் பொங்குகிறதாம்.
கோடைக் காலம் முழுவதும், ஜினிவா ஏரியில் படகுகள் நிறைந்திருக்கும். ஜினிவா நகரில் பல படகுத் துறைகள் இரு கரைகளிலும் உள்ள ஊருக்கு ஊர் படகுத் துறைகள். பெரிய ஊர்களில் ஒன்றுக்கு மேற்