உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



இப்படிப்பட்ட ஏற்றமிகு கிரேக்கர்கள், உடற்கல்வி வளர்த்த வரலாற்றை, நாம் நான்கு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். அது எளிதாகவும் இனிதாகவும் நமக்கு விளங்கும் என்பதால், பகுத்துப்பார்ப்போம். 1. Gopmoir smooth (Homeric Period) 2. ஸ்பார்ட்டன் காலம் (Spartan Period) 3. sIQg56ürssû smooth (Athenian Period) 4. கிரேக்கர்கள் பொற்காலம் (Golden Period) /. ஹோமர் காலம் ஹோமர் என்ற ஓர் அந்தகக் கவி இருந்தார். அவர்கிரேக்க நாட்டின் கீர்த்தி பெற்ற மிகப்பெரிய கவிஞர். அவர் இயற்றிய இரண்டு காப்பியங்கள் (புராணங்கள்) மிகப் பிரசித்திப் பெற்றவை. 1. இலியட் (Iliad). 2. ஒடிசி (dெyssey) என்பனவாகும். இந்த இரண்டு புராணக் காப்பியங்களும் கிரேக்கர்கள் கி.மு. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்க்கை முறையை மிகத் துல்லியமாக, தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. உடலுக்குப் பயிற்சி - மனதுக்கு இசை என்பது அக் காலத்திய பழமொழியாக, வாழ்க்கை வழியாக விளங்கி வந்தது. மக்கள் வாழ்க்கையில் வேளாண்மையும்,மதமும் முக்கிய அங்கம் வகித்தன. ஆதிகால சமுதாய அமைப்பு போன்ற சமுதாய வாழ்க்கை முறை அமைந்திருந்தாலும், மதம் தான் மக்கள் மனதில் மிகுதியான இடம் பிடித்துக்கொண்டு ஆட்டிப் படைத்தது. மக்களுடைய வாழ்க்கையில், கிரேக்க உடற்கல்வி போதித்த பெருங்கொள்கை என்னவென்றால், மனிதன்