உலக நாடுகளில் உடற்கல்வி
9
செயலில் வல்லவன் (Man of Action): மனிதன் அறிவில் வல்லவன் (Man of wisdom) என்று தான் இருக்க வேண்டும் என்று போதித்தது.
தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தேகத்தால் திறமும் பலமும், பொலிவும் வலிவும் பெற்று, முழு வாழ்க்கையையும் பெரு மகிழ்வுடன் வாழ வேண்டும். அதற்காக ஒவ்வொரு வரும் தங்களைப் பயிற்சி மூலமாகத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
அவர்கள் செய்த உடற் பயிற்சிகள் எல்லாமே இயற்கையானதாக, எளிதாக இருக்கும்படி அமைக்கப் பட்டிருந்தன. அவர்கள் அந்தப் பயிற்சி மூலமாக நீடித்து உழைக்கும் ஆற்றல் (Endurance); நெகிழுந்தன்மை வாய்ந்த உடல் (Ability); உடல்பலம் (Strength); வீரம் (Courage); வீரச்செயல்களில் நாட்டம் (Bravery) நிறைய பெற்றுக் கொண்டு வாழ வேண்டுமென்பது கிரேக்கத்தின் உடற்கல்விக் கொள்கையாக இருந்து வந்தது.
ஆக, அக்கால ஒவ்வொரு கிரேக்கக் குடிமகனும், மற்றவர்களைவிட உடலில் பொலிவும், வலிவும், கட்டான அமைப்பும் கவர்ச்சியான தோற்றமும் கொண்டு வாழ்வதிலேயே முனைப்பாக வாழ்ந்தான்.
திட்டமிடாத திருவிழா விளையாட்டுக் காட்சிகள்
கிரேக்க காலத்தில் உடற்கல்வியானது திட்டமிட்டு எங்கும் நடத்தப்படவில்லை. உடற்கல்வியும் உடற்பயிற்சியும் தனிப்பட்ட மனிதர்களின் தொடர் உழைப்பாக, தினசரி முயற்சியாக இருந்ததே தவிர, கூட்டமாகச் சேர்ந்து பயிற்சி பெறும் அரங்கங்கள் இல்லாத நிலையிலேயே அவை நடமாடித் திரிந்தன.
விளையாட்டுத் தனித்திறன் போட்டி நிகழ்ச்சிகள் ஆங்காங்கே இருந்தாலும், அவை சாதாரண குடிமக்களுக்குக்