26
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
குழந்தைகளும் தங்கள் இளம் வயதில் என்னென்ன சிறுசிறு விளையாட்டுக்களை ஆடிப் பழக முடியுமோ, அத்தனையிலும் ஆர்வமுடன் பங்கு பெற்று மகிழ்ந்தனர். மலர்ச்சியுடன் வளர்ந்தனர். -
நொண்டியடித்து ஆடுதல் போன்ற பல ஆட்டங்கள், கண்ணாமூச்சி ஆட்டம், ஒடி ஒளிந்து கண்டுபிடித்து ஆடுதல் போன்ற ஆட்டங்கள், பட்டம் விடுதல், பம்பரம் சுற்றுதல், கதை சொல்லி மகிழ்தல் போன்ற குழந்தை விளையாட்டுக்கள் அவர்களுக்கு உதவின. உற்சாக மளித்தன. உடலையும் மனதையும் வளர்த்தன. அந்த வயதில் பெரியவர்களை மதிக்கவும்; மரியாதை அளிக்கவும், கற்பித்து வழி நடத்தினர்.
கல்வி கற்கும் மாணவப் பருவம்
ஏழாவது வயதிலேயே கல்விகற்கும் படலம் தொடங்கி விடுகிறது. ஸ்பார்ட்டாவில் நடைபெற்றது போல, மாணவர்கள் தனியாக ஓரிடத்திற்குச் சென்று தங்கவும் படிக்கவும் அனுப்பப்படவில்லை. அவர்கள் வீட்டிலிருந்து கொண்டே, கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர்.
தினம் வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்று படித்து வந்தனர். அந்தப் பள்ளிப்படிப்பானது, அந்த இளைஞர்களைச் சிறந்த சமுதாயவாழ்வுக்கு. அரசியல் அமைப்புக்கு, இராணுவப் போரிடும் திறமைக்கு, மதவழிமரபுகளுக்கு பொருந்தும் வண்ணமே போதிக்கப்பட்டன.
இத்தகைய கூர்மையான குறிக்கோள்களைக் கற்பிக்க, அங்கே இரண்டு விதமான பள்ளிகள் இயங்கி வந்தன. 1. பாலஸ் டிரா பள்ளிமுறை. 2. டிடாஸ்கேலியம் பள்ளிமுறை, இவ்விரண்டையும் சற்று விரிவாகக் காண்போம். (அ)பாலஸ்டிரா பள்ளி (palaestra)