உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உலக நாடுகளில் உடற்கல்வி

29


பட்டது. படித்தல், மனப்பாடம் செய்தல், கணக்குப் பாடம் கற்றல் போன்ற முறைகளும் கற்பிக்கப்பட்டன.

கிரேக்கப் பாடல்களை மனதுக்குள் நிலைத்திருக்கப் படிக்கும் முறை வற்புறுத்தப்பட்டது போல, பேச்சுப் போட்டிகளும், இசைக்கருவி இயக்கும் முறைகளும் கற்பிக்கப்பட்டன.

இப்படிப்பட்ட கல்விமுறை 14 வயதுவரை தொடர்ந்தது.

4 முதல் 18 வயது வரை பெறுகிற கல்வியை வசதியுள்ள மாணவர்கள் தாம் கற்க முடிந்தது. காரணம் படிப்புத் தொகை அதிகமாக இருந்தது தான்.

3. இராணுவ சேவை

பதினெட்டு வயது வந்த இளைஞன், இராணுவத்தில் தன்னை ஒரு வீரனாகப் பதிவு செய்து கொள்கிறான். அதற்கு எபிபஸ் (Ephebus) என்று பெயர், இராணுவ வீரனாக மாறியதும், அவன் மற்ற இளைஞர்களைப் போலவே, வீர சபதம் போன்ற ஆத்மார்த்தமான உறுதி மொழியை எடுத்துக் கொள்கிறான்.

எனக்குத் தரப்பட்ட போராயுதங்களை நான் இழிவாகப் பயன்படுத்த மாட்டேன். எனது நெருங்கிய நண்பர்களை எப்பொழுதும் ஏமாற்றமாட்டேன். அருள் மிகுந்த ஆலயங்களைக்காக்கவும், அருமைமிகுந்த பொது மக்களின் பொருட்களையும் உடமைகளையும் தனித்தோ, கூடிநின்றோ பொறுப்புடன் காத்திடப் போராடுவேன். எனது தாய்நாட்டின் மேன்மைக்குப் பங்கம் எள்ளத்தனையும் விளைவிக்காமல் மேலும் மேலும் மேன்மை பெற உழைப்பேன். பாடுபடுவேன். நீதிபதிகளாக யார் வந்தாலும், அவர்கள் ஆணைகளுக்குக் கீழ்ப்பணிவேன். நாட்டு சட்டங்களை யார்