உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


3. இதிையான் விளையாட்டுக்கள் (The isthmion games)

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அதாவது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், நான்காவது ஆண்டிலும், கொரின்ந்த் (Corinth) என்னும் இடத்தில், பொசிடன் தெய்வத்தைப் பெருமைப்படுத்துவதற்காக போட்டிகள் நடத்தப் பெற்றன. பொசிடன் தெய்வம் என்பது (Posiedon) கடல் தெய்வமாகும்.

இஸ்த்மியான் விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்றிருந்தவை. ஓடுகளப் போட்டிகள், குதிரையேற்றப் போட்டிகள், இசைப் போட்டிகள், படகுப் போட்டிகள்.

போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பார்ஸலே இலைகள் (Parsley) பரிசாக வழங்கப்பட்டன. பிற்காலத்தில் இந்த இலைகள் மாற்றம் பெற்றன. பைன் மர இலைகள் (Pine) பரிசுப் பொருளாகி பெருமை பெற்றன.

4. நிமியன் விளையாட்டுக்கள்

ஆர்கலிஸ் என்னும் இடத்தில், சீயஸ் தெய்வத்தைப் பெருமைப்படுத்துவதற்காக, இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் போட்டிகளை நடத்தினார்கள். ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றதற்குப் பிறகு இரண்டாம் ஆண்டிலும், நான்காம் ஆண்டிலும், கோடை காலத்தில் நடைபெற்ற போட்டிகள் இவை.

ஒலிம்பிக் போட்டியில் நடத்தப் பெற்ற போட்டிகள் எல்லாம், நிமியன் போட்டிகளிலும் இடம் பெற்றிருந்தன.

போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், புதிய பார்ஸ்லே இலைகளையே பரிசாகப் பெற்றனர்.