உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

35


முக்கிய குறிப்பு: ஒலிம்பிக் போட்டிகள் தேசியப் போட்டியாக விளங்கியது. மற்ற மூன்று போட்டிகளும் வட்டார அளவில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டன.

இந்தப் போட்டிகள் மூலம், உடற் கல்வியும், உடற்பயிற்சிகளும் மக்களிடையே பெரும் போட்டிகள் நடைபெற்றன என்றும், விளையாட்டுக்களும் விழாக்களும் நாட்டிலே விமரிசையாகக் கொண்டாடப்பெற்று பெருமையடைந்தன என்பதும் நமக்குத்தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது.

ஏதென்ஸ் உடற்கல்வி முறை:

இன்றைய சிறுவர்கள் பெருகின்ற கல்வி முறைபோல, ஏதென்ஸ் நாட்டுக் கல்வி முறை அமைந்திருக்கவில்லை.

பட்டம் விடுதல், பொம்மை வண்டி ஓட்டுதல், பொம்மைக் குதிரைகள், வாத்துகள் போன்றவற்றை வைத்துக் கொண்டு விளையாடுதல்; கண்டுபிடித்து விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம், பந்து விளையாட்டுக்கள் போன்ற ஆட்டங்களும், சுறுசுறுப்பான செயல்முறைகளும், ஏதென்ஸ் கல்வி முறையில் பெருவாரியாக இடம் பெற்றிருந்தன.

ஏழு வயதுக்குப் பிறகு பாலஸ்டிரா பள்ளிக்குச் சென்ற சிறுவர்கள், ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள், விளையாட்டுக்கள், ஆட்டங்கள் போன்றவற்றில் தான் அதிகமாக ஈடுபட்டார்கள்.

பனிரெண்டு வயதுக்குப் பிறகு, அவர்கள் மேற்கூறிய பயிற்சிகளில், அதிகக் கவனத்துடன் பயிற்சிகளைப் பழகினார்கள்.

பொதுவாக, வயது வந்த வாலிபர்கள், கடுமையான பயிற்சிகளை நிறையப் பெற்றார்கள். அவர்களுக்கு ஓட்டப் போட்டிகளுக்கான வாய்ப்புகள் நாட்டில் நிறைய கிடைத்தன. போட்டிகள் பொதுவாழ்வில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.