36
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
பென்டாதலான் என்ற பல முனைப் போட்டிகளும் அங்கு பாங்காக இடம் பெற்றிருந்தன. ஓட்டம், தாண்டுதல், தட்டெறிதல், வேலெறிதல், மல்யுத்தம் போன்ற 5 போட்டிகள் கொண்டதுதான் பென்டாதலான் என்பதாகும்.
விதிமுறைகளே இல்லாத குத்துச் சண்டைப் போட்டி, மக்கள் மத்தியிலே மிகவும் பிரபலமாக இருந்தது. போட்டி ஆரம்பித்து, ஒருவர் தோற்றுவிட்டேன் என்று ஒப்புக் கொள்ளும்வரை அல்லது ஒருவர் மயக்க முற்று விழும்வரை, குத்துச் சண்டைப் போட்டிகள் தொடர்ந்தது என்பது தான் சிறப்பான குறிப்பாகும்.
பெண்களும் மல்யுத்தப் போட்டியில் தீவிரமாகப் பங்கு பெற்றனர். நீச்சல் போட்டிகள் நிறைய இடம் பெற்றன. நாட்டியம் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக மக்களிடையே விளங்கியது.
மக்கள் நடனத்தை கோயில்களில் ஆடினர். நாட்டுப் புறங்களில் ஆடினர். வீட்டிலும், விழாக்களிலும் கூட, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
குழந்தை பிறந்தாலும் ஆடினர். கல்யாண நேரங்களிலும் ஆடினர். இறந்த நிகழ்ச்சியிலும் அவர்கள் ஆடினர். ஏதென்ஸ் மக்கள் வாழ்க்கையே மகிழ்ச்சிகரமான நடன வாழ்க்கையாகவே அமைந்திருந்தது என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஏதென்ஸ் நடனம் வெறும் மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல. இறைவனை வணங்கித் துதிக்கும் பாங்கிலும், உடல் அழகை வெளிப்படுத்தும் விதத்திலும், உடல் வளர்ச்சிக்கும் அறிவுவளர்ச்சிக்கும் எழுச்சியை ஊட்டும் முறையிலும் நடனங்கள் இடம் பெற்றிருந்தன.
ஏதென்ஸ் இளைஞர்கள் கல்வி முறையானது- ஒன்றை பார்த்துப் புரிந்து செயல்படுதல் (imitation);