40
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
இவ்வாறு உடல் ஆற்றலையும் கட்டான காட்சிதரும் உடலமைப்பு பற்றியும் கூறிய சாக்ரட்டீஸ், உடல் உறுப்புக்களில் ஒன்றிரண்டு மட்டும் உறுதியாகிட பயிற்சி செய்வதை விரும்பவில்லை.
அதிகமாக ஓடுபவர்களுக்கு, கால்களில் மட்டும் வளர்ச்சியும் வலிமையும் உண்டாகின்றன. குத்துச் சண்டைக்காகப் பயிற்சி செய்பவர்களுக்கு, இடுப்புக்கு மேற்பகுதி மட்டும்.நன்றாக செழிப்படைகிறது. உடல்வளர்ச்சி என்றால் அப்படி ஒரு பக்க வளர்ச்சியாக இருக்கக்கூடாது. உடல் முழுதும் ஒன்றிய முழு வளர்ச்சியாக அமையவேண்டும் என்ற அவசியத்தை அறிவுரையாக வழங்கினார்.
இக்கருத்துக்கள் சினபோன் எழுதிய மெபோரடில்லா எனும் நூலில் காணக் கிடக்கின்றன.
பிளேட்டோ
சிந்தனைச் சிற்பி சாக்ரட்டீஸின் சிறந்த மாணவனாக விளங்கியவர் பிளேட்டோ.
இவரது சொந்தப் பெயர் அரிஸ்டோகிலிஸ் என்பது, இவர் கொண்டிருந்த பரந்த தோள்கள் அமைப்பினால் இவருக்கு பிளேட்டோ என்ற பட்டப்பெயர் உண்டாயிற்று.
பிளேட்டோ சிறந்த தத்துவ அறிஞர் மட்டுமல்ல, இஸ்த்மியான் விளையாட்டுப்போட்டிகளில் இரண்டு முறை வெற்றி பெற்று, சிறந்த வீரராக விளங்கியவர்.
இவருடைய கருத்துக்கள் எல்லாம், உடற்கல்வியானது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாயமாக இருக்க வேண்டும். என்பதுதான்.
ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளும் இசையும் ஒவ்வொரு வருக்கும் இளமைக் காலத்திலிருந்தே அளிக்கப்பட